குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - வெளியான சூப்பர் தகவல் !!
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்ததில் இருந்து தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏராளமானவை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வியே மக்கள் மத்தியில் உள்ளது.
இதுதொடர்பாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக அரசு பொய் வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்களை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தாமதமாகி வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?
இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என தெரிந்தே திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தலின் போது அளிக்க மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து பேசினார். இதுகுறித்து பேசிய அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரைவில் செயல்படுத்த உள்ளார் என்று கூறியுள்ளார். மாதம் ஆயிரம் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்பதே பொதுமக்களின் ஆவலாக இருக்கிறது.
இதையும் படிங்க..கேரளாவில் ஓகே.! தமிழ்நாட்டில் கைதா? பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக - ஓங்கி அடிக்கும் சீமான்