Asianet News TamilAsianet News Tamil

தென் மாவட்ட வெள்ள நிவாரன பணிகள்.. முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

Tamilnadu cm mk stalin chaired high-level meeting on relief work in flood affected souther n districts Rya
Author
First Published Dec 29, 2023, 3:25 PM IST | Last Updated Dec 29, 2023, 3:25 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே வெள்ளம் சூழந்தது. பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இன்னும் ஒரு சில இடங்கள் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச்செயலாளர், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அரசின்  நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ அதிகனமழையாலும் - வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் - தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

அதிகாரத்தோடு செயல்படுங்க... அப்போதுதான் நாங்களும் பவர்புல்லா இருக்க முடியும்-பிரியாவுக்கு கவுன்சிலர் அட்வைஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நம் முதலமைச்சர் அவர்கள், அரசின்  நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios