Asianet News TamilAsianet News Tamil

அதிகாரத்தோடு செயல்படுங்க... அப்போதுதான் நாங்களும் பவர்புல்லா இருக்க முடியும்-பிரியாவுக்கு கவுன்சிலர் அட்வைஸ்

சென்னை மாநகர சாலைகள் மோசமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ள திமுக கவுன்சிலர் சிற்றரசு, சாலைகளை விரைவில் சரிசெய்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை திமுக பெற முடியும் என கூறினார். 

A DMK councilor has said that they can get votes in the elections only if the bad roads in Chennai are repaired KAK
Author
First Published Dec 29, 2023, 2:23 PM IST

மோசமான நிலையில் சென்னை சாலைகள்

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேமுதிக அலுவலகத்தில்  விஜயகாந்தின் உடல் அடக்கத்திற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து  வார்டுகளில் உள்ள குறைகளையும் கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டி பேசினர். அப்போது பேசிய திமுக கவுன்சிலர் சிற்றரசு, சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளது. எனவே ஜனவரி நடுப்பகுதிக்குள் சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தச் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, முதலமைச்சரிடம் எடுத்துரைத்து, அதிக அளவு நிதியைப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.  இதை செய்தால் தான் நேரில் சென்று மக்களை சந்திக்க முடியும். சாலைகள் சீரமைக்கப்பட்டால்தான் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற முடியும் என கூறினார். 

A DMK councilor has said that they can get votes in the elections only if the bad roads in Chennai are repaired KAK
அதிகாரிகள் பேச்சை கேட்க மாட்டாங்க

முன்னதாக பேசிய  திமுக கவுன்சிலர் கண்ணன், சென்னை மேயர் மிகவும் சக்திவாய்ந்தவராகவும், மேயரின் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வலியுறுத்தினார். நீங்கள் மாநகராட்சிக்கு மட்டும் மேயர் அல்ல, முழு சென்னைக்கும் மேயர். நீங்கள் சக்திவாய்ந்தவராக இல்லாவிட்டால், மாநகராட்சி மற்றும் கவுன்சிலர்களும் சக்திவாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். உங்களின் உத்தரவு அல்லது அறிவிப்புகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்க மாட்டார்கள் என கூறிய அவர் அதிகாரிகள் கடைப்பிடிப்பதில்லையெனவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்பு நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவறு செய்த அதிகாரிகள் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர் கண்ணன் பேசும்பொழுது மற்ற திமுக கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் பேசியது போதும் அமருங்கள் என கூறினார்.

இதையும் படியுங்கள்

முதல்வர் ஸ்டாலினை தேடி சென்று சந்தித்த ராமதாஸ்.! அமைச்சர்கள் குழுவோடு ஆலோசனை- என்ன காரணம் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios