3:44 PM IST
மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்? பட்ஜெட்டில் அறிவிப்பு!!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதில் பலரும் எதிர்பார்த்த மகளிருக்கான உரிமை தொகை எப்போது தட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3:26 PM IST
TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?
தமிழக அரசின் 2023ம் ஆண்டின் பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3:12 PM IST
நாங்கதான் பர்ஸ்ட் இருந்தாலும்.. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு இது - முதல்வரை பாராட்டிய கமல் ஹாசன்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1:54 PM IST
Tamil Nadu Budget 2023-24 Highlights : தமிழ்நாடு பட்ஜெட் 2023ன் முக்கிய அம்சங்கள் இதோ !!
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு, மெட்ரோ ரயில் என பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் 2023ம் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.
1:54 PM IST
இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?
தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1:53 PM IST
தமிழர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு - சுகாதாரத்துறை அறிவிப்புகள்
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1:53 PM IST
மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்.. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் - அதிரடி அறிவிப்புகள்
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1:40 PM IST
பத்திரப்பதிவு கட்டணம் அதிரடியாக குறைப்பு.. எவ்வளவு தெரியுமா? நிதியமைச்சர் சொன்ன தகவல்..!
பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க
12:53 PM IST
போரில் உயிரிழக்கும் தமிழக ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்வு..!
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12:49 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்.. ஓய்வூதியம், பராமரிப்பு உதவித்தொகை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:05 PM IST
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க முடிவு
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
12:04 PM IST
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
12:00 PM IST
வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு
வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
11:57 AM IST
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
11:54 AM IST
சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் தொடக்கம்
சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
11:42 AM IST
மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள்
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்
11:25 AM IST
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு
புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி.
எண்ணும் எழுத்து திட்டம் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ.110 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும். தற்போது 1 முதல் 3ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும். 10 கோடி செலவில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
11:20 AM IST
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:17 AM IST
ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படும்
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
11:13 AM IST
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி சாலை மேம்பாலம் கட்டப்படும்
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:12 AM IST
நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
11:10 AM IST
அடையாறு ஆற்றில் கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள்
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
11:08 AM IST
5000 கி.மீ கிராம சாலையை மேம்படுத்த 2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!
5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
11:05 AM IST
ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்
ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும். இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
11:04 AM IST
சென்னை கிண்டியில் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
11:00 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1500ஆக அதிகரிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:57 AM IST
புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:53 AM IST
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10:50 AM IST
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு தொடக்கபள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என நிதியமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
10:47 AM IST
ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்
ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
10:43 AM IST
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு - மாணவர்களுக்கு ரூ.7500
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7500 வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:38 AM IST
காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.200 கோடி செலவில் கல்லூரிகள்
54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:35 AM IST
தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடெசன்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
10:30 AM IST
நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:28 AM IST
இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:27 AM IST
இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
10:23 AM IST
போரில் உயிரிழக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி ரூ.40 லட்சமாக உயர்வு
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
10:23 AM IST
போரில் உயிரிழக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி ரூ.40 லட்சமாக உயர்வு
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
10:16 AM IST
நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம்
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம். அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:12 AM IST
கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.30,000 கோடி செலவினங்களை குறைத்துள்ளோம்
கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, செலவினங்களில் ரூ.30,000 கோடி குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
10:08 AM IST
பட்ஜெட் உரையை தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்துவரும் நிலையில் அதிமுகவினர் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
9:42 AM IST
சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.
9:29 AM IST
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
8:31 AM IST
தமிழ்நாடு பட்ஜெட்... நேரலையில் பார்க்க இதோ லிங்
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள லிங் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
7:58 AM IST
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்.! இடம்பெறும் முக்கிய அம்சங்கள் என்ன.? என்ன.? தெரியுமா.?
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடும்பத்தலைவிகளுக்கான் மாதாந்திர உதவி தொகை, தனி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7:55 AM IST
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக பட்ஜெட் 2022-23 நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னதாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
7:52 AM IST
ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் கொண்டுவர வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
7:28 AM IST
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமா திமுக.. சிலிண்டருக்கான ரூ.100 மானியம் அறிவிக்கப்படுமா?
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், சிலிண்டருக்கான ரூ.100 மானியம், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு போன்றவற்றின் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
6:52 AM IST
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இளங்கோவனுக்கு சட்டப்பேரவையில் இருக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சட்டப்பேரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மூலமாக அவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
6:20 AM IST
முக்கிய பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவை கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
தமிழகத்தில் சட்டம்- ஓழுங்கு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.
6:10 AM IST
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்... மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் வெளியாகுமா?
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தமிழக அரசு, தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12:08 AM IST
எதிர்க்கட்சிகள் தயார்
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வட மாநிலத் தொழிலாளர் பற்றிய வதந்தி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, நீட் தேர்வு, பேனா நினைச்சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடும்.
12:06 AM IST
பட்ஜெட் உரைக்குப் பின்...
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் படஜெட் உரைக்குப் பின் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெறும். பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் தமிழக பட்ஜெட் 2023 குறித்த விவாதம் எத்தனை நாட்கள் நடக்கும் என்றும் தெரியும்.
பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழக வேளாண் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
12:06 AM IST
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை
இந்த பட்ஜெட்டில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆகும். இத்துடன் இன்னும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். அத்துடன் துறை வாரியாக திட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி பற்றிய தகவல்களும் இடம்பெறும்.
12:05 AM IST
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக சட்டப்பேரவை இன்று (மார்ச் 20, திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தமிழக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
3:44 PM IST:
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதில் பலரும் எதிர்பார்த்த மகளிருக்கான உரிமை தொகை எப்போது தட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3:26 PM IST:
தமிழக அரசின் 2023ம் ஆண்டின் பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3:12 PM IST:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1:54 PM IST:
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு, மெட்ரோ ரயில் என பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் 2023ம் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.
1:54 PM IST:
தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1:53 PM IST:
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1:53 PM IST:
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1:40 PM IST:
பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க
12:53 PM IST:
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12:51 PM IST:
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:05 PM IST:
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
12:04 PM IST:
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
12:47 PM IST:
வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
3:41 PM IST:
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
11:54 AM IST:
சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
11:42 AM IST:
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்
11:25 AM IST:
புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி.
எண்ணும் எழுத்து திட்டம் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ.110 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும். தற்போது 1 முதல் 3ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும். 10 கோடி செலவில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
12:53 PM IST:
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:17 AM IST:
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
12:49 PM IST:
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:12 AM IST:
நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
11:10 AM IST:
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
11:08 AM IST:
5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
12:30 PM IST:
ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும். இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
11:04 AM IST:
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
11:00 AM IST:
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:45 PM IST:
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:31 PM IST:
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12:33 PM IST:
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு தொடக்கபள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என நிதியமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
12:42 PM IST:
ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
12:41 PM IST:
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7500 வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:38 AM IST:
54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:35 AM IST:
தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடெசன்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
10:30 AM IST:
நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:28 AM IST:
இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:40 PM IST:
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
10:23 AM IST:
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12:39 PM IST:

12:37 PM IST:
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம். அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
12:59 PM IST:
கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, செலவினங்களில் ரூ.30,000 கோடி குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
10:10 AM IST:
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்துவரும் நிலையில் அதிமுகவினர் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
12:58 PM IST:
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.
9:29 AM IST:
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
12:57 PM IST:
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள லிங் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
7:58 AM IST:
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடும்பத்தலைவிகளுக்கான் மாதாந்திர உதவி தொகை, தனி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7:54 AM IST:
தமிழக பட்ஜெட் 2022-23 நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னதாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
7:52 AM IST:
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
7:28 AM IST:
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், சிலிண்டருக்கான ரூ.100 மானியம், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு போன்றவற்றின் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
6:52 AM IST:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சட்டப்பேரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மூலமாக அவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
6:20 AM IST:
தமிழகத்தில் சட்டம்- ஓழுங்கு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.
6:10 AM IST:
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தமிழக அரசு, தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12:16 AM IST:
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வட மாநிலத் தொழிலாளர் பற்றிய வதந்தி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, நீட் தேர்வு, பேனா நினைச்சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடும்.
12:20 AM IST:
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் படஜெட் உரைக்குப் பின் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெறும். பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் தமிழக பட்ஜெட் 2023 குறித்த விவாதம் எத்தனை நாட்கள் நடக்கும் என்றும் தெரியும்.
பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழக வேளாண் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
12:14 AM IST:
இந்த பட்ஜெட்டில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆகும். இத்துடன் இன்னும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். அத்துடன் துறை வாரியாக திட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி பற்றிய தகவல்களும் இடம்பெறும்.
12:13 AM IST: