Asianet News TamilAsianet News Tamil

நாங்கதான் பர்ஸ்ட் இருந்தாலும்.. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு இது - முதல்வரை பாராட்டிய கமல் ஹாசன்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

kamal haasan congratulates chief minister stalin in 1000 rupees per month for housewifes
Author
First Published Mar 20, 2023, 3:09 PM IST

சட்டப்பேரவையில் அறிவிப்பானது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகளில், திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவலான எதிர்பார்ப்பு நிலவியது. 

தற்போது அதனை பூர்த்தி செய்யும் வகையில் தகுதி உடைய குடும்பத் தலைவியருக்கு மகளிர் உரிமைத்தொகையாக ரூ1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்ததாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

kamal haasan congratulates chief minister stalin in 1000 rupees per month for housewifes

இதையும் படிங்க..Tamil Nadu Budget 2023-24 Highlights : தமிழ்நாடு பட்ஜெட் 2023ன் முக்கிய அம்சங்கள் இதோ !!

ஆனால் தகுதி உடையவர்களுக்கு உரிமைத் தொகை என்பதற்கு அதிருப்திகளும் எழுந்துள்ளன. அனைத்து மகளிருக்கும் 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதி உடையவர்களுக்கு மட்டும் வழங்குவதில் என்ன நியாயம் என்று பொதுமக்களிடையே ஒருபக்கம் அதிருப்தியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் திமுக அரசின் அறிவிப்பு குறித்து பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம் ஆகும். 

புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்.. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் - அதிரடி அறிவிப்புகள்

இதையும் படிங்க..இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?

Follow Us:
Download App:
  • android
  • ios