Asianet Tamil News Live: தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு... அவருக்கு வயது 85!!

Tamil News live updates today on november 21 2022

சென்னையில் உடல்நலக் குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் மருத்துவமனையில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். 1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராசன் ஒருவர்தான். பின்னர் 1992 முதல் 1995ம் ஆண்டுவரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை வகித்தார். அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

2:04 PM IST

தீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! 6 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை- வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

1:35 PM IST

தனியார் DTH சேவைக்கு ஆதரவாக திமுக அரசு..? அரசு கேபிள் டிவி முடக்கமா..? - ஓபிஎஸ் ஆவேசம்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமே முடக்கப்பட்டு விடுமோ, தனியார் DTH-க்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதோ, இனிமேல் குறைந்த செலவில் அதிக சேனல்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிப்பதாக ஓ பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

12:35 PM IST

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! சதி திட்டத்தின் பின்னனி என்ன..? ஷாரீக்கிடம் என்ஐஏ போலீசார் விசாரணை..?

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரீக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ போலீசார் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க..

11:48 AM IST

மெட்ராஸ் ஐக்கு தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை 'மெட்ராஸ் ஐ' நோய் அறிகுறியாகும். குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம், மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

11:30 AM IST

கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ்.. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கன்.. போற போக்கில் திமுகவை விளாசிய டிடிவி..!

ஆக்டோபஸ் போல் எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும் என்ற நிலையை கருணாநிதி குடும்பம் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி உள்ளதாக டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

10:32 AM IST

பாஜகவிற்கு ஆதரவாக அதிமுகவை கரைக்கும் செயலில் எடப்பாடி பழனிசாமி..? திருமாவளவன் விமர்சனம்

மாநில அரசு எடுக்க முடிவுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள் அதை உணராமல் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். பிஜேபி ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடியை தருகிறார்கள் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:50 AM IST

சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து..! கிஷோர் கே சாமியை அதிரடியாக கைது செய்த போலீஸ்

ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டிற்காக கிஷோர் கே சாமியை  பாண்டிச்சேரியில் வைத்து போலீசார் இன்று  காலை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:28 AM IST

அதிமுக பொதுக்குழு வழக்கு.. உச்ச நீதிமன்றம் இன்று என்ன உத்தரவு பிறப்பிக்கபோகிறது? ஓபிஎஸ், இபிஎஸ்.. திக்! திக்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் என்ன உத்தரவை பிறப்பிக்க போகிறது என்ற பயத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர். 

மேலும் படிக்க

9:06 AM IST

சென்னையில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னையில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தமிழகம் - புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நாளை காலை நெருங்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

8:46 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார் இதனை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:45 AM IST

வெட்க கெட்ட காங்கிரஸ்.. பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை! போட்டு தாக்கும் பாஜக.!

அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான் என கூறிய கே.எஸ்.அழகிரிக்கு பாஜக கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க

8:17 AM IST

குழந்தை பிறந்த பின்னும் குறையாத மவுசு... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு கல்யாணமாகி, குழந்தை பிறந்துவிட்ட போதும் தற்போது இவர் கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பது தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் படிக்க

8:06 AM IST

அதிமுக 4ஆக பிளவு பட்டதாக கூறுகிறார்கள்.! ஆனால் திமுகவோ அமைச்சர்களால் 7 துண்டாகிவிட்டது - இபிஎஸ் ஆதரவாளர்

திமுக அமைச்சர்கள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையென்று தெரிவித்த அதிமுக மூத்த நிர்வாகி ராஜன் செல்லப்பா, தற்போது திமுக 7ஆக பிளவுபட்டுள்ளதாக விமர்சித்தார்.

மேலும் படிக்க..
 
7:50 AM IST

சென்னை, கடலூரில் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. 

7:48 AM IST

சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பால் இன்று முதல் 24ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. 

7:35 AM IST

கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த கோர விபத்து.. தூக்கி வீசப்பட்டதில் 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

பீகாரில் பக்தர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

7:35 AM IST

பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை.. உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. அமைச்சர் மா.சு

மருத்துவர்களுக்கு பாதிப்பு உள்ளது போன்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதிப்பு உள்ளது. ஆகையால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

2:04 PM IST:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

1:35 PM IST:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமே முடக்கப்பட்டு விடுமோ, தனியார் DTH-க்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதோ, இனிமேல் குறைந்த செலவில் அதிக சேனல்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிப்பதாக ஓ பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

12:35 PM IST:

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரீக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ போலீசார் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க..

11:48 AM IST:

 தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை 'மெட்ராஸ் ஐ' நோய் அறிகுறியாகும். குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம், மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

11:30 AM IST:

ஆக்டோபஸ் போல் எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும் என்ற நிலையை கருணாநிதி குடும்பம் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி உள்ளதாக டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

10:32 AM IST:

மாநில அரசு எடுக்க முடிவுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள் அதை உணராமல் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். பிஜேபி ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடியை தருகிறார்கள் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:50 AM IST:

ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டிற்காக கிஷோர் கே சாமியை  பாண்டிச்சேரியில் வைத்து போலீசார் இன்று  காலை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:28 AM IST:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் என்ன உத்தரவை பிறப்பிக்க போகிறது என்ற பயத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர். 

மேலும் படிக்க

9:06 AM IST:

சென்னையில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தமிழகம் - புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நாளை காலை நெருங்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

8:46 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார் இதனை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:45 AM IST:

அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான் என கூறிய கே.எஸ்.அழகிரிக்கு பாஜக கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க

8:17 AM IST:

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு கல்யாணமாகி, குழந்தை பிறந்துவிட்ட போதும் தற்போது இவர் கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பது தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் படிக்க

8:06 AM IST:

திமுக அமைச்சர்கள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையென்று தெரிவித்த அதிமுக மூத்த நிர்வாகி ராஜன் செல்லப்பா, தற்போது திமுக 7ஆக பிளவுபட்டுள்ளதாக விமர்சித்தார்.

மேலும் படிக்க..
 
7:50 AM IST:

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. 

7:48 AM IST:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பால் இன்று முதல் 24ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. 

7:35 AM IST: