அதிமுக பொதுக்குழு வழக்கு.. உச்ச நீதிமன்றம் இன்று என்ன உத்தரவு பிறப்பிக்கபோகிறது? ஓபிஎஸ், இபிஎஸ்.. திக்! திக்!
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் என்ன உத்தரவை பிறப்பிக்க போகிறது என்ற பயத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர்.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்
இந்த வழக்கை துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. அதில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்டவேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும் என தீர்ப்பு அளித்தனர்.
இதையும் படிங்க;- விரைவில் அதிமுக பொதுக்குழு.. வாய்ப்பு கிடைத்தால் டிடிவி.யை சந்திப்பேன்.. இபிஎஸ்ஐ அலறவிடும் ஓபிஎஸ்.!
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்களை கேட்காமல் எந்த உதத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் செப்டம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போதே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.
இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமானது. தொண்டர்களின் விருப்பதத்திற்கு ஏற்ப, கட்சியின் நலனைக்கருதியே ஒற்றை தலைமை என்பது உருவாக்கப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆகையால், அதன் முடிவே இறுதியானது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க;- சிலை கடத்தலில் இபிஎஸ்க்கு தொடர்பு? அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? கொளுத்தி போட்ட புகழேந்தியால் பரபரப்பு..!