காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News live: பளுதூக்குதலில் இந்தியாவிற்கு தங்கம்.. மீராபாய் சானு புதிய சாதனை !
Tamil News live: பளுதூக்குதலில் இந்தியாவிற்கு தங்கம்.. மீராபாய் சானு புதிய சாதனை !

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ ஸ்நாட்ச் பிரிவில் 88 கிலோ எடையைத் தூக்கி தேசிய சாதனையை சமன் செய்து புதிய விளையாட்டு சாதனையை படைத்துள்ளார். இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்று தந்து அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்
ஆகஸ்ட் 9 - அரசு விடுமுறை
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
பொறியாளர் தேர்வு விவகாரம்
பொறியாளர் தேர்வு விவகாரத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
'எங்கும் கமிஷன் ; எதிலும் கமிஷன்..' திமுகவை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தது. இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசையால் இம்முதலீட்டை விரட்டியடித்துள்ளது’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த இங்கிலாந்து பிரதமர் யார் ?
இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் யார் வெற்றி பெறுவார் ? என்பது பற்றி ஸ்மார்கெட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
செஸ் ஒலிம்பியாட்: 2வது சுற்றில் தமிழக வீரர்கள் அசத்தல் வெற்றி
மாமல்லபுரத்தில் நடந்துவரும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2வது சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். 2வது சுற்றில் இந்திய ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
ஆடவர் சி பிரிவில் இடம்பெற்று ஆடிய கார்த்திகேயன் முரளியும் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன், கார்த்திகேயன் முரளி ஆகிய மூவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
மகளிர் சி அணியில் இடம்பெற்று ஆடிய சேலத்தை சேர்ந்த நந்திதா 34வது நகர்த்தலில் சிங்கப்பூர் வீராங்கனை என் இம்மானுவேலுவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சி அணியில் இடம்பெற்று ஆடிய ஈஷா கர்வடேவும் வெற்றி பெற்றார். நந்திதாவும் தமிழகத்தை சேர்ந்தவர்.
காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்.. குருராஜா வெண்கலம் வென்று அசத்தல்
பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா ஸ்னாட்ச் சுற்றில் 118 கிலோ எடையும், க்ளீன் & ஜெர்க்கில் 151 கிலோ எடையும் தூக்கி மொத்தமாக 269 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.
விரிவாக படிக்க - காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்..! குருராஜா வெண்கல பதக்கம் வென்று அசத்தல்
தேர்வர்களே அலர்ட்.. குரூப் 4 தேர்வு கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு.. எந்த பிரிவுகளுக்கு எவ்வளவு..? முழு விவரம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் தேர்வர்களின் கருத்துகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்.. பளுதூக்குதலில் வெள்ளி வென்றார் சங்கேத் சர்கார்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளில் 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளி பதக்கம் வென்று, காமன்வெல்த்தில் இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கிவைத்தார்.
சுஷாந்த் சிங்கை போல் மர்ம மரணம்... இறந்த நிலையில் இளம் நடிகர் பிணமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு
கொச்சியை சேர்ந்த சரத் சந்திரன், முதலில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். பின்னர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி பின்னர் படங்களில் நடிக்கத்தொடங்கினார். இவர் அனீஸ்யா என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் திடீரென மரணமடைந்து இருப்பது மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.மேலும் படிக்க
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு
நடிகர் சிம்புவுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை ஒன்றை சொல்லியுள்ளாராம். சிம்புவுக்கு அவர் சொன்ன கதை பிடித்துப்போனதால், இவர்கள் இருவரும் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இது உறுதியானால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும். மேலும் படிக்க
விசாரணை கைதி மரணம் - ஐ.சி.எஃப் போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவு
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் அயனாவரம் ஐ.சி.எஃப் போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டு அயனாவரம் காவல்நிலைய காவல்துறை நண்பனாக இருந்த நித்தியராஜ் என்பவர் பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யபட்ட நிலையில், சிறையில் அடைத்த 5 நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நித்தியராஜ் ராயப்பேட்டை மருத்துவமனை செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை கோரி உயிரிழந்தவரின் தாயார் தொடுத்த வழக்கில், சிபிசிஐடி க்கு மாற்றி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அதிகாரிகளின் உதவி இல்லாமல் ஆக்கிரமிப்பு நடைபெறாது - சென்னை உயர்நீதிமன்றம்
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடைபெறாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாற்று இடம் வழங்கினால் தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்பது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். நீர் நிலைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகளில் ஆக்கிரமிப்புகள் தமிழகத்தின் சூழலியலை பாதிக்கிறது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி தரப்புக்கே தேர்தல் ஆணையம் அழைப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது - அமைச்சர் உறுதி
மண்ணை பாழாக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பதில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமல் எண்ணெய் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Gold rate today : இல்லத்தரசிகளுக்கு ஷாக்!! தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கும் ரூ.80 உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கும் ரூ.10 உயர்ந்து ரூ.4815க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க
இபிஎஸ் நீக்கம்... தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், ஜே.சி.டிபிரபாகர், மனோஜ் பாண்டியனின் நியமனம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
மக்களே அலர்ட்.. மாதந்தோறும் 1.30 லட்சம் வரை சம்பளத்தில் அரசுப் பணி.. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..
சமூக அலுவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப் பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
சிவகங்கை அருகே மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சிவகங்கை அருகே மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். முயல் வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி முகவூரை சேர்ந்த அய்யனார், அவரது மகன்கள் அஜித், சுகந்திரபாண்டி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல.. முதல்வர் ஸ்டாலின்
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல; கொள்கைக்கான கூட்டணி. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.