பளுதூக்குதலில் இந்தியாவிற்கு தங்கம் பெற்று தந்து அசத்தியுள்ளார் மீராபாய் சானு.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பளுதூக்குதலில் 2 பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார், ஸ்னாட்ச்சில் 113 கிலோ மற்றும் க்ளீன் & ஜெர்க்கில் 135 கிலோ என மொத்தம் 248 கிலோ எடையை தூக்கிய சங்கேத் சர்கார், மலேசியாவின் பிப் அனிக்கை விட ஒரு கிலோ குறைவாக தூக்கியதால் தங்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.
பிறகு அதைத்தொடர்ந்து பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டி நடந்தது. 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட குருராஜா, ஸ்னாட்ச்சில் 118 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 151 கிலோ எடையை தூக்கினார். மொத்தமாக 269 கிலோ எடையை தூக்கிய குருராஜா வெண்கலம் வென்றார்.

மலேசியாவின் முகமது ஸ்னாட்ச் சுற்றில் 127 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 158 கிலோ என மொத்தமாக 185 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். பப்புவா நியூ கினியா வீரர் வெள்ளி வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு மற்றுமொரு சாதனையை படைத்திருக்கிறார்.
மகளிருக்கான 49 கிலோ ஸ்னாட்ச் சுற்றில் 84 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 88 கிலோ என மொத்தமாக 172 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றுள்ளார்.ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் தங்கம் இதுவாகும். அதுமட்டுமின்றி இன்று மட்டும் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
