09:15 PM (IST) Aug 09

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு இது கட்டாயம் !!

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

09:05 PM (IST) Aug 09

தமிழக முன்னாள் முதல்வர்களின் சாதனைகள்

தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்களின் சாதனைகள் பட்டியலிடப்பட்டன. கமலின் பின்னணி குரலில் நிகழ்த்தப்பட்ட காட்சியில், ராஜாஜி, காமராஜர், அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அவரவருக்கான அடையாளங்களுடன் நினைவுகூரப்பட்டனர்.

08:51 PM (IST) Aug 09

தமிழ் மண் நிகழ்த்துக்காலம் பாகம் 2

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழ் மண் நிகழ்த்துக்காலம் முதல் பாகம் நிகழ்த்தப்பட்ட நிலையில், 2ம் பாகம் நிறைவு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. 2ம் பாகத்தில், இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்களிப்பு குறித்து கமல்ஹாசனின் பின்னணி குரலில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன், மருதநாயகம், பூலித்தேவன், பாளையக்காரர்கள், வேலுநாச்சியார் ஆகியோரின் பங்களிப்பு குறித்து விளக்கப்படுகிறது.

08:27 PM (IST) Aug 09

செஸ் ஒலிம்பியாட் வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்திய வீரர்கள் நிஹால் சரின், குகேஷ் ஆகிய இருவரும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றனர். அர்ஜூன் எரிகாசி வெள்ளி பதக்கம் வென்றார். வைஷாலி, திவ்யா தேஷ்முக், பிரக்ஞானந்தா, தானியா சச்தேவ் ஆகிய நால்வரும் வெண்கலம் வென்றனர்.

08:26 PM (IST) Aug 09

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ‘திடீர்’ மாற்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி தற்போது திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

07:45 PM (IST) Aug 09

இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் மானுவேல் ஆரோனுக்கு மரியாதை

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் மானுவேல் ஆரோனுக்கு நினைவுப்பரிசு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மானுவேல் ஆரோனுக்கு நினைவுப்பரிசை வழங்கி கௌரவித்தார்.

07:05 PM (IST) Aug 09

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு வரலாறை விவரிக்கும் கலைநிகழ்ச்சி

ஜல்லிக்கட்டு, கபடி, செஸ் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு வரலாறை விவரிக்கும் கலைநிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி தமிழர்களின் விளையாட்டுகளை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

06:49 PM (IST) Aug 09

பறந்துகொண்டே பியானோ வாசித்து அசத்திய வெளிநாட்டு பெண் இசை கலைஞர்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வெளிநாட்டு பெண் இசை கலைஞர் பறந்துகொண்டே பியானோ வாசித்து, நேரு உள் விளையாட்டரங்கை அதிரவிட்டார்.

06:32 PM (IST) Aug 09

வீணை சக்கரவர்த்தி ராஜேஷ் வைத்யா மற்றும் நவீன் புல்லாங்குழல் இசை மழையில் நனையும் நேரு விளையாட்டு அரங்கம்

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா டிரம்ஸ் சிவமணியின் இசை கச்சேரியுடன் தொடங்கியது. இந்த இசை நிகழ்ச்சியில் வீணை சக்கரவர்த்தி ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க, சிவமணி டிரம்ஸில் பட்டைய கிளப்ப, நவீன் புல்லாங்குழல் வாசித்துவருகிறார். இவர்களின் இசை மழையில் நேரு உள் விளையாட்டரங்கமே நனைகிறது.

06:25 PM (IST) Aug 09

டிரம்ஸ் சிவமணியின் இசை கச்சேரியுடன் தொடங்கியது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நிறைவு விழா நடந்துவருகிறது. டிரம்ஸ் சிவமணியின் இசை கச்சேரியுடன் நிறைவு விழா தொடங்கியுள்ளது. 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை காண

06:06 PM (IST) Aug 09

வெளியானது விக்ரம் கோப்ரா நியூ ரிலீஸ் டேட்..எப்ப வெளியீடு தெரியுமா?

முன்னதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி கோப்ரா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பின் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31-ல் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. 

மேலும் படிக்க...வெளியானது விக்ரம் கோப்ரா நியூ ரிலீஸ் டேட்..எப்ப வெளியீடு தெரியுமா?

05:12 PM (IST) Aug 09

அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !

அதிமுக முன்னாள் எம்.பி. மாயத்தேவர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

மேலும் படிக்க

05:06 PM (IST) Aug 09

பீகார்: நிதிஷ் குமாருக்கு ஜித்தன் ராம் மாஞ்சி ஆதரவு: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று சேரும்-அகிலேஷ்

பீகார் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிதிஷ் குமாருக்கு இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சித் தலைவர் ஜித்தன் ராம் மாஞ்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளார். விரிவான செய்திகளுக்கு

05:05 PM (IST) Aug 09

வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா ?

மழைக்காலங்களில் வீணாகும் நீர், கிணறு வழியாக செல்லும் போது 6 கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் எனவும் தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க

05:02 PM (IST) Aug 09

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளும் வீரர்களும் வென்ற பதக்கங்கள்

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்தியா பி மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா ஏ ஆகிய 2 அணிகள் மட்டுமே பதக்கங்களை வென்றன. இந்தியா ஓபன் பி அணியும், இந்தியா மகளிர் ஏ அணியும் வெண்கலம் வென்றன.

தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிஹால் சரின் ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். அர்ஜுன் எரிகாசி வெள்ளி வென்றார்.

பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய நால்வரும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

04:52 PM (IST) Aug 09

பாரதியிடம் உண்மையை சொன்ன லட்சுமி... இன்றைய எபிசோட் இதோ !

பாரதியிடம் நீங்கள் தான் என்னுடைய தந்தை அம்மாவும், பாட்டியும் சொல்லி விட்டார்கள் எனக் கூறி அழுகிறாள் லட்சுமி.

மேலும் செய்திகளுக்கு... பாரதியிடம் உண்மையை சொன்ன லட்சுமி... இன்றைய எபிசோட் இதோ !

04:51 PM (IST) Aug 09

விஜயின் வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு என்ன ரோல் தெரியுமா?

படத்தில் விஜயின் சகோதரனான ஷாம் இருக்கலாம் என கூறப்படுகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு படம் மூலம் ஷாம் - விஜியுடன் இணைகிறார்.

மேலும் செய்திகளுக்கு...விஜயின் வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு என்ன ரோல் தெரியுமா?

03:49 PM (IST) Aug 09

அதிமுகவின் முதல் எம்.பி.. எம்ஜிஆரின் படைத்தளபதி மாயத்தேவர் மறைந்தார்..சோகத்தில் அதிமுக.

எம்ஜிஆர் கட்சி தொடங்க உறுதுணையாக இருந்தவர், அதிமுக என்ற கட்சியை தொடங்கிய உடன் அக்கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அக்கட்சியின் முதல் எம்பி மாயத்தேவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது (88) அவரின் மரணம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் படிக்க

.

02:41 PM (IST) Aug 09

குடும்ப வருமானத்திற்காக இந்தி விஷயத்தில் ஸ்டாலின் குடும்பம் சமரசம்.. டார்டாரா கிழிக்கும் வானதி

திமுக இந்தி மொழியை எதிர்த்து வருகிறது, ஆனால் தனது குடும்ப வியாபாரம் என்று வரும்போது ஸ்டாலின் குடும்பத்தினர் ஹிந்தி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்கின்றனர் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கிண்டல் செய்துள்ளார். திமுகவினர் அரசுப்பள்ளி குழந்தைகள் இந்தி கற்றுக்கொள்ளக் கூடாது என எதிர்க்கிறார்கள் ஆனால் குடும்ப வருமானத்திற்காக இந்தித் திரைப்படங்களை வெளியிடுகின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் படிக்க


02:40 PM (IST) Aug 09

பிரதமர் மீது இவ்வளவு பக்தியா.. ஆந்திரா TO டெல்லிக்கு யாத்திரை.. 2000 கி.மீ நடந்தே செல்லும் மோடி பக்தர்.

பிரதமர் மோடியின் தீவிர தொண்டர் ஒருவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பாதயாத்திரையாக சென்று அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். தற்போது அவரின் நடைபயணம் வெற்றிகரமாக மகாராஷ்டிர மாநிலத்தை அடைந்துள்ளது. அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க