ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும்போது சபரிமலையில் இருந்து பிரசாதங்களான அரவணை பாயசம், அப்பம், நெய். விபூதி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி வந்து தங்கள் குடும்பத்தாருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.
Tamil News Highlights: “ஒரு வாசகம், திருவாசகம்..” ரஜினி ஸ்டைலில் பன்ச்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்தும் பேசியதாக ரஜினி தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வைகோவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு, ‘ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாகப் பேசுவார்' என்று கூறினார்.
சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்.. கேரள அரசு முடிவு
ஒரு வாசகம், திருவாசகம்.. ரஜினிக்கு சப்போர்ட் செய்த செல்லூர் ராஜு !
‘நடிகர் ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை. அது அவருக்கும் புரிவதில்லை.நடிகர் ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று ரஜினிகாந்தை கிண்டலடித்து பேசினார் வைகோ.
நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் ரஜினியும் ஆளுநரும் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது.. சீறும் அண்ணாமலை.
ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஆளுநர் அரசியல் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். அரசியலில் பேசியதாக ரஜினியை கூறியதற்கு சமூகத்தில் நடைபெறும் விஷயங்களை பேசியதாகத் தான் அர்த்தம் என்றும் அண்ணாமலை புதுவிளக்கம் கொடுத்துள்ளார். மேலும் படிக்க
திமுகவில் 'நிதி' களுக்கு மட்டும்தான் பதவி.. என்ன சுத்தி கூட்டம்.. ஸ்டாலினை நெருங்க முடியுமா.. எடப்பாடி மாஸ்
அதிமுகவைப் பொறுத்தவரையில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிகளுக்கு வரமுடியும் ஆனால் திமுகவில் "நிதிகள்" மட்டுமே பதவிக்கு வரமுடியும் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். சாதாரண கிளைச் செயலாளராக இருந்த நான் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன் இது திமுகவில் சாத்தியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க
கூட்டுறவு வங்கியில் வைத்து பெண் ஊழியர் பலாத்காரம்.. தலைமறைவாக இருந்த காங் கவுன்சிலர் கைது.
கூட்டுறவு வங்கி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கண்ணூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக- ஆந்திர எல்லையில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் டி.வி கிருஷ்ணகுமாரை எடக்காடு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் படிக்க
பெரியாருக்கு சிலை நான் வைக்குறேன் ... BJP ல இருந்து என்னை தூக்குனாலும் பரவாயில்ல... அமர் பிரசாத் ரெட்டி.
என்னை பாஜகவிலிருந்து நீங்கினாலும் பரவாயில்லை நான் பெரியாருக்கு 40 இடங்களில் சிலை வைக்கிறேன், ஆனால் அதன் கீழ் அவர் சொன்ன தமிழ் படித்தவன் காட்டுமிராண்டி எனபதை எழுதுவேன் என பாஜகவை சேர்ந்த அமர்பிரகாஷ் ரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பைட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசி சர்ச்சையாகி உள்ள நிலையில் அமர் பிரசாத் அவருக்கு ஆதரவாக இவ்வாறு பேசியுள்ளார். மேலும் படிக்க
அதிமுக துண்டு துண்டா உடைஞ்சதுக்கு திமுக தான் காரணம்.. பாஜக இல்லை.. மனம் திறந்து பேசிய சசிகலா.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுகதான் முழுக்காரணம் என்றும் இதற்கு அதிமுகவில் உள்ளவர்களோ, அல்லது மத்திய அரசு காரணம் இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். மாயத்தேவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மதுரை வந்த அவர் இவ்வாளு கூறினார். மேலும் படிக்க
சசிகலா, TTV,OPS மூவரும் இணையலாம்... ஆனால் அவர்கள் அதிமுகவில் இணைய முடியாது. ஜெயக்குமார் தாறுமாறு.
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவர் வேண்டுமானால் ஒன்றாக இணையலாம் ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிமுகவில் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதே அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஒலிம்பியாட் போட்டி இதைவிட சிறப்பாக நடந்திருக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார். மேலும் படிக்க
இலங்கையில் மின்சார கட்டணம் 264 % உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி !
இலங்கையில் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.
மகளின் காதலனை நள்ளிரவில் வரவழைத்த ஷகிலா.. இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா?
சண்முகத்தின் 2-வது மகளும், நெய்வேலி 9-வது வட்டத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தாய் ஷகிலாவுக்கு தெரியும். ஆனால் சண்முகத்துக்கு தெரியாது.
பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? இபிஎஸ்க்கு நீதிபதி சரமாரி கேள்வி
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பொதுக்குழு விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டதா? இல்லையா என்பது குறித்த வாதங்களை முன் வையுங்கள் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். சட்டப்பூர்வமாக அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதா? முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் மீறப்பட்டு இருந்தால்,முறையாக பின்பற்றப்படவில்லை என்றால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!
ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இவர் ‘சாஃப்ட் முதலமைச்சர்’என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு - குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்' - முதல்வர் எச்சரிக்கை !!
12ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு பகுதியில் 12ம் வகுப்பு மாணவி வகுப்பறையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக மாணவியின் தோழிகள், வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழுவை யார் கூட்டலாம்? நீதிபதி கேள்வி
தேர்தல் விதி திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் அந்த பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வர் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை யார் கூட்டலாம்? நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு கட்சி விதிகளின் படி தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் அடிப்படை விதி.. அதில் திருத்தம் செய்ய முடியாது.. ஓபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் தொடங்கியது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளராக நீடிப்பார் என 2017-ல் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதுதான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது கட்சியின் அடிப்படை விதி, அதில் திருத்தம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா ? இபிஎஸ் நிலைமை ?
ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றாக கரம் கோர்த்து களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருமன் பாடல் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய ராஜலட்சுமி
விருமன் படத்தில் இடம்பெறும் மதுரவீரன் என்கிற பாடலை இசையமைப்பாளர் யுவனுடன் முதலில் சேர்ந்து பாடியது ராஜலட்சுமி தான், பின்னர் அந்த பாட்டை அதிதியை பாட வைத்து வெளியிட்டனர். அதுகுறித்து ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க
தமிழகத்திற்கு ரூ.4,758 கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு
மாநிலங்களுக்கு கூடுதல் தவணை வரி பகிர்வாக ரூ.1.16 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில், தமிழகத்திற்கு ரூ.4,758 கோடியை விடுவித்துள்ளது. மாநிலங்களின் முதலீடு மற்றும் வளர்ச்சி செலவினங்களை வலுப்படுத்தும் வகையில் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு...! டிடிவி தினகரன் தகவலால் அதிர்ச்சியில் இபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் உடன் வரும் காலத்தில் கை கோர்க்க வாய்ப்பு உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.