Asianet News TamilAsianet News Tamil

மகளின் காதலனை நள்ளிரவில் வரவழைத்த ஷகிலா.. இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா?

சண்முகத்தின் 2-வது மகளும், நெய்வேலி 9-வது வட்டத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தாய் ஷகிலாவுக்கு தெரியும். ஆனால் சண்முகத்துக்கு தெரியாது.

nlc worker murdered... Wife Arrest
Author
First Published Aug 10, 2022, 4:38 PM IST

நெய்வேலியில் கள்ளக்காதலால் ஏற்பட்ட குடும்ப தகராறில் என்எல்சி ஊழியரை சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனைவி, மகளின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (50). என்எல்சி முதலாவது சுரங்கத்தில் சுகாதார பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஷகிலா(46) என்கிற நிர்மலா. இவர்களின் மூத்த பெண் சித்ராவுக்கு திருமணமாகி ஆந்திராவில் வசித்து வருகிறார். பிரேம் நாராயணன்(17), 2வது மகள் பிரியங்கா(17), இரட்டையர்களான இருவரும் பாட்டி வீடான சேலத்தில் தங்கி நாமக்கல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டு.. புருஷன் கூப்பிட்டதுமே போய்டுவியா.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்

இந்நிலையில்,  கடந்த 6ம் தேதி கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சண்முகம் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஷகிலா வீட்டுக்கு வெளியே நின்ற ஆம்னி வேனில் படுத்து தூங்கினார். இதனையடுத்து, மனைவி காலை எழுந்து பார்த்த போது சண்முகம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி கத்தி கூச்சலிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சண்முகம் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சண்முகத்தின் அண்ணன் பிச்சையாபிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, சண்முகம் கொலை செய்யப்பட்ட வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தாலும், வீட்டின் பின்பக்க கதவை திறந்து எளிதில் உள்ளே வந்துவிட முடியும். எனவே இதுபற்றி அறிந்த மர்ம நபர்கள்தான், உள்ளே புகுந்து சண்முகத்தை வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்படி, முதலில், சண்முகத்தின் மனைவி ஷகிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

சண்முகத்திற்கும் சுகந்தி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. சண்முகம் தான் வாங்கும் சம்பளத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் தனது குடும்பத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த சகிலா, சண்முகத்தை தீர்த்து கட்ட முடிவு  செய்தார். இதற்கிடையே, சண்முகத்தின் 2-வது மகளும், நெய்வேலி 9-வது வட்டத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தாய் ஷகிலாவுக்கு தெரியும். ஆனால் சண்முகத்துக்கு தெரியாது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஷகிலா கணவனின் கள்ளக்காதலால் எனது வாழ்க்கை சீரழிந்து விட்டது. அவரை கொன்று விட்டால் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என அவரிடம் சகிலா ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  நேரம் காலம் இல்லாமல் கணவர் ஓயாத டார்ச்சர்... மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை.. அனாதையான குழந்தை.!

இதனையடுத்து, நள்ளிரவில் ஷகிலாவும், தமிழ்வளவனும் சேர்ந்து சண்முகத்தை வெட்டி கொலை செய்து விட்டு, பின்பக்க வாசல் வழியாக வெளியே வந்துவிட்டனர். பின்னர் காலையில் ஷகிலா தனக்கு எதுவும் தெரியாதது போன்று நாடகமாடி போலீசை ஏமாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிந்து சகிலா, தமிழ்வளவன் ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios