புலி வருது கதைதான் போங்க.. சென்னை வானிலை மையத்தை விளாசிய தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிடலாம். வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என எப்போதும் அறிவிக்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். 

tamil nadu weatherman pradeep john slams meteorological department tvk

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

சென்னை மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம் ஏற்பட்டது. மழை குறித்து வானிலை மையம் சரியான  முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்காததே பேரிழப்புக்கு காரணம் என ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டினர். அதேபோல்,  சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிடலாம். வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என எப்போதும் அறிவிக்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதையும் படிங்க;- வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான்.. இழுத்து மூடிட்டு போங்க.. அன்புமணி ஆவேசம்!

இந்நிலையில், தென் மாவட்டங்களில் டிசம்பர் 30, 31ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ததே தவிர சொல்லும்படியாக எங்கும் கனமழை இல்லை. இதனை சுட்டிக்காட்டி தமிழ்நாடு வெதர்மேன் வானிலை மையத்தை விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க;- அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கன மழை இல்லை... ஆனா சென்னைக்கு மட்டும் மீண்டும் மழை.? வெதர்மேன் அப்டேட்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- புத்தாண்டின் தாக்கம் - உண்மையில் ஒரு துளி கூட மழை பெய்யாத போது, தென் தமிழ்நாட்டிற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால், உண்மையில் ஒரு சொட்டு மழை கூட இல்லை. சமீபத்திய தோல்விக்குப் பிறகு இதுதான் நிலைமை என்றால், உண்மையான கனமழை வரும்போது, மக்கள் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மேலும் புலி வருது, புலி வருது என தினமும் அச்சுறுத்தி விட்டு ஒருநாள் உண்மையாகவே புலி வரும் போதுது எச்சரிக்கும் போது இதை பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற கதையை சுட்டிக்காட்டி ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios