அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கன மழை இல்லை... ஆனா சென்னைக்கு மட்டும் மீண்டும் மழை.? வெதர்மேன் அப்டேட்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவடையும் காலத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில கன மழைக்கான வாய்ப்பு குறைவு என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை அச்சுறுத்திய மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் மழையானது புரட்டிப்போட்டது. இதன் காரணமாக பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் உள்ளே புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. எனவே இந்த மழை பாதிப்பால் மக்கள் மழையை நினைத்தாலே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் வட கிழக்கு பருவ மழை முடியும் நிலையை எட்டியுள்ளது. இதனால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா.? என்ற கேள்வியானது எழுந்துள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,
ஒரு வாரத்திற்கு மழை இல்லை
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கான வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வட கிழக்கு பருவ மழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 27 ஆம் தேதி கன மழை பெய்ய இருப்பதாக ஆடியோ ஒன்று பரவி வருகிறது. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை இது தவறான தகவல் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே இந்த தவறான ஆடியோவை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டு்ள்ளார்.
இதையும் படியுங்கள்
அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் ஊத்தப்போகுதாம் மழை.. பொதுமக்களை அலறவிடும் வானிலை மையம்!