நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீசாரை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல் துறைக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
காவல்துறை ஐஜிக்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீசாரை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல் துறைக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: School College Holiday: பிப்ரவரி 2ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஐஜிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமர் பிரசாத் ரெட்டியை தூக்க சல்லடைப்போட்டு தேடும் போலீஸ்.. தப்பிக்க அதிரடி முடிவு எடுத்த அண்ணாமலை ரைட் அண்ட்.!
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
