Asianet News TamilAsianet News Tamil

அமர் பிரசாத் ரெட்டியை தூக்க சல்லடைப்போட்டு தேடும் போலீஸ்.. தப்பிக்க அதிரடி முடிவு எடுத்த அண்ணாமலை ரைட் அண்ட்.!

சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள் பாஜகவில் மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார். கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். 

Amar Prasad Reddy filed a petition in Chennai High Court seeking bail tvk
Author
First Published Jan 31, 2024, 10:36 AM IST | Last Updated Jan 31, 2024, 11:00 AM IST

பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள் பாஜகவில் மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார்.  கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இதனையொட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது கூறி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஆட்களை அழைத்து வராத காரணத்தால் ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? பாஜகவுடன் கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்! திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்

Amar Prasad Reddy filed a petition in Chennai High Court seeking bail tvk

இதனை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு  பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாளை சரமாரி தாக்கியுள்ளனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். 

இதனை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட தேவி அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுனர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது  நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து அமர் பிரசாத் ரெட்டி அவரது ஓட்டுநர் ஸ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது கோட்டூர்புரம் போலீசார் மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. 

 இதையும் படிங்க: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை.? தமிழக தேர்தலில் களம் இறங்குகிறார்.! எந்த தொகுதி தெரியுமா.?

Amar Prasad Reddy filed a petition in Chennai High Court seeking bail tvk

அவரை பிடிக்க மும்பை, டெல்லி, குஜராத்துக்கு 3 தனிப்படைகள் விரைந்துள்ளது. இந்நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios