தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அனீஸ் சேகர் திடீர் ராஜினாமா.! காரணம் என்ன.?

எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த தமிழக பிரிவு ஐஎஎஸ் அதிகாரியான அனீஸ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Tamil Nadu IAS officer Anees Shekhar has resigned from his post KAK

ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா

தமிழக பிரிவு ஐஎஎஸ் அதிகாரியான அனீஸ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா ஏற்றுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவருடைய பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் மருத்துவரான அனீஸ் சேகர், தனது சொந்த மாநிலமான கேரளத்தில் மருத்துவர் பணியைத் தொடரவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.  கேரளத்தைச் சேர்ந்த அனீஸ் சேகர், 2011-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்ட ஆட்சியரா இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

Tamil Nadu IAS officer Anees Shekhar has resigned from his post KAK

ராஜினாமா காரணம் என்ன.?

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை வலியுறுத்தும் வகையில், ஆட்சியர் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு சைக்கிளிலேயே சென்று கவனத்தை ஈர்த்தார். இவர்  தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த அவர் சொந்த காரணங்களுக்காக அவருடைய ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இஸ்ரோ விளம்பர சர்ச்சை: முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக பாஜக..
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios