தமிழக பாஜக முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சீண்டியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அதே பொல் திமுகவினரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி, பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியும் தனது X வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்!

இந்த நிலையில் தமிழக பாஜகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆனால் சீன மொழியில் வாழ்த்து தெரிவித்து சீண்டியுள்ளது. தமிழக பாஜக X வலைதள பதிவில் “ முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிடித்த சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பாட்டினத்தில் இஸ்ரோவுக்கான புதிய ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக திமுக சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
அதில் சீனக்கொடியுன் இருக்கும் சீன ராக்கெட்டின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

Scroll to load tweet…

இதனை பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை பலரும் விமர்சித்திருந்தனர். இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித்துறையையும் திமுகவினர் அவமதித்துவிட்டனர் என்று கூறிய பிரதமர் மோடி அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சீனாவின் மாண்டரின் மொழியில் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது பாஜக. 

ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஐய்..என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?