மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி !!
மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது (78). படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000க்கும் மேற்பட்ட படங்களில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடிய இவர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்வாணி ஜெயராமுக்கு அண்மையில் மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரது மறைவிற்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க..மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ!.. ரசிகர்கள் சோகம் !!
இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?