Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சரின் தனிச்செயலாளர்களுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 ஆம் நிலை செயலாளராக இருந்த அனு ஜார்ஜ் 3 மாதம் விடுமறையில் செல்ல இருப்பதால் அவரிடம் இருந்த 12 துறைகள் மற்ற 3 தனி செயலாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government orders allocating additional departments to Chief Minister private secretaries
Author
First Published Jan 19, 2023, 2:52 PM IST

தனி செயலர்களுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு

முதலமைச்சரின் தனிச்செயலாளர்களுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதலமைச்சரின் தனி செயலாளராக உள்ள உதயசந்திரனுக்கு, சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. உமாநாத் ஐ.ஏ.எஸ்க்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில், ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நின்றால் விளம்பரம், நடந்தால் விளம்பரம்,..! தவறான புள்ளி விவரங்களை வெளியிடும் ஸ்டாலின்-விளாசும் எடப்பாடி

Tamil Nadu Government orders allocating additional departments to Chief Minister private secretaries

அனு ஜார்ஜ் விடுப்பில் செல்கிறாரா.?

சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு , கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி, காதி, சமூக சீர்த்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை திட்டமிடுதல் ஆகியவை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் 4ம் தனி செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு வழங்கப்பட்டிருந்த 12 துறைகள், தற்போது 3 தனி செயலாளர்களுக்கு பிரித்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தனி செயலாளர்கள் அனு ஜார்ஜ் மூன்று மாதம் விடுமுறையில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

பாமக மாநில துணை தலைவர் என கூறி பொதுமக்களிடம் பணம் பறித்த நபர்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ராமதாஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios