தமிழக அரசு இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி அளிக்கிறது. பிரைடல், ஃபேஷன், சினிமா மேக்கப் முதல் SFX வரை அனைத்தையும் கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு.

சொந்த தொழில் தொடங்க பயிற்சி அளிக்கும் தமிழக அரசு : தமிழக அரசு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுகாகவும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது .

அந்த வகையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.06.2025 முதல் 11.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032

அழகு கலை பயிற்சி வழங்கும் தமிழக அரசு

இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க. சரியான பயிற்சி தேவை! அந்த வகையில் பிரைடல், ஃபேஷன், சினிமா, HD மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர், SFX வரை அனைத்தும் ஒரே இடத்தில் கற்கும் முழுமையான பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

ஒரு மேக்அப் கலைஞரின் பயணம் இங்கே தொடங்குகிறது! இங்கே உங்கள் எதிர்காலம் உருவாகும்!

  • திருமண & வரவேற்பு மேக்க்அப் லுக்.
  • V HD, 3D, 4D மேக்கிஅப் நுட்பங்கள்
  • ஸ்பெஷல் எஃபெக்ட் (SFX) மேக்க்அப் கலைகள்.
  • இயற்கை தோற்றம் தரும் பருத்த புரோ வலைகள்.
  • தோல் உணர்திறன் சோதனை மற்றும் திருத்தம்.
  • அதிக நுட்பமுள்ள கண் மேக்க்அப் மற்றும் ஹேர் ஸ்டைலிங்.
  • சேலை அணிவது குறித்த தொழில்நுட்ப பயிற்சி.
  • தயாரிப்பாளர்கள் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை.
  • முழுமையான பயிற்சி (100% ஹான்ட்ஸ்-ஆன்).
  • வேலைவாய்ப்பு வழிகாட்டி உதவி.

யாருக்காக?

மேக்கப் ஆர்வலர்கள்

சலூன் தொழில்முனைவோர்

அழகு துறையில் பணியாற்ற விரும்புபவர்கள்

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337/9360221280, இடம்:EDII-TN வளாகம். ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.இந்த பியற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.