தீபாவளிக்கு மறுநாளும் லீவுதான்... மகிழ்ச்சியா கொண்டாடுங்க: தமிழக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 13ஆம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் இருந்தும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி கொண்டாடுகின்றனர். அவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை விடுமுறை நாள் முடிந்து மக்கள் திரும்பிவருவதற்கும் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 13ஆம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை இந்த விடுமுறைக்கு மாற்று வேலை நாளாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது" என்று செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை தீபாவளி கொண்டாட ஊருக்குச் செல்லும் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹம்மிங் செய்தால் போதும்! யூடியூப் அந்தப் பாடலை கரெக்டா கண்டுபிடிக்கும்! ட்ரை பண்ணி பாருங்க!