ஹம்மிங் செய்தால் போதும்! யூடியூப் அந்தப் பாடலை கரெக்டா கண்டுபிடிக்கும்! ட்ரை பண்ணி பாருங்க!
கூகுளின் ஹம் டூ சர்ச் (hum-to-search) என்ற எளிமையான, சூப்பரான அம்சத்தின் மூலம், வெறும் டியூனை மட்டும் வைத்து அதற்குரிய பாட்டு என்ன என்று கண்டுபிடித்துவிடலாம்.
எப்போதோ கேட்ட ஒரு இனிமையான டியூன் உங்கள் மனதில் பதிந்திருக்கும். ஆனால், அந்த டியூனுக்கு உரிய பாடலின் பெயர் அல்லது பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்காது! எவ்வளவு யோசித்தாலும் அந்த டியூன் எந்தப் பாடலுக்கு உரியது என்று ஞாபகம் வராமல் போகலாம்.
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பயன்படுத்த யூடியூப் சூப்பாரன வசதியை வைத்திருக்கிறது. உங்கள் மனதில் இருக்கும் டியூனை ஹம்மிங் அல்லது விசில் செய்தால் யூடியூப் அந்த டியூனில் இருக்கும் பாடலைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடும். குரலை பயன்படுத்தி தேடலை மேற்கொள்ள இந்த வசதி பயன்படுகிறது.
இந்த அம்சம் யூடியூபின் மொபைல் அப்ளிகேஷனில் மட்டுமே கிடைகுகம் பிரத்தியேகமான வசதி ஆகும். யூடியூப் இணையதளத்தில் இந்த அம்சம் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. மனதில் பதிந்துள்ள டியூனை முணுமுணுப்பதைக் கேட்டு இந்த மாயாஜாலத்தை எப்படி நிகழ்த்துகிறது என்று பார்க்கலாம்.
இந்த வசதியை பயன்படுத்த மொபைலில் யூடியூப் அப்ளிகேஷனைத் திறந்து, திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள தேடல் ஐகானைத் தட்டவும். அதில் ஹம்-டு-சர்ச் (Hum to Search) அம்சத்தைப் பயன்படுத்த மைக் ஐகானைக் கிளிக் செய்யவும். இதற்கு முன் உங்கள் மொபைலின் மைக்ரோஃபோனை பயன்படுத்த யூடியூப் அப்ளிகேஷனுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
பிரைவசி பற்றிக் கவலைப்படுபவர்கள் தேவையான நேரத்தில் மட்டும் மைக்ரோஃபோனை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கலாம். பயன்படுத்திய பிறகு மைக்ரோஃபோன் அனுமதியை முடக்கவும் செய்யலாம்.
மைக் ஐகானைத் தொட்டதும் நீங்கள் நினைக்கும் டியூனை ஹம்மிங் செய்யலாம். அல்லது விசில் செய்யலாம். அதைக் கேட்டு யூடியூப் சரியான பாடலைத் தேடிக் கொடுக்கும்.
யூடியூப் அளிக்கும் பதில் சரியான பாடல் தானா என்று கேட்டுப் பார்க்கலாம். நீங்கள் ஹம்மிங் செய்த டியூனுக்கான பாடல் இல்லை என்றால் மீண்டும் மைக்ரோஃபோன் ஐகானைத் தட்டி மீண்டும் முயற்சி செய்யலாம்.
இந்த அம்சம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து YouTube பயனர்களுக்கும் கிடைக்காமலும் இருக்கலாம். ஆனால், படிப்படியான அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும். முதன்மையாக இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கும். குறிப்பாக யூடியூப் பயன்பாட்டின் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தினால் இந்த வசதியை பயன்படுத்திப் பார்க்கலாம். iOS பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.