Breaking : அரசு கல்லூரிகள்.. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத மதிப்பூதியம் அதிகரிப்பு - தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான மாத மதிப்பூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது இதுகுறித்த முழு தகவலை பின்வருமாறு காணலாம்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாத மதிப்பூதியம் தற்பொழுது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு மாத மதிப்பூதியமாக 20,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சனாதனம் என்றால் சமாதானம்... அதை ஒழிக்க முடியாது! வளர்ந்து கொண்டே போகும்! ஆளுநர் தமிழிசை திட்டவட்டம்
மேலும் அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்கால ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்கனவே மாத மதிப்பூதியமான 15,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 25 ஆயிரம் ரூபாயாக மாத மதிப்பூதியத்தை உயர்த்தி அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்ற தற்காலிக ஆசிரியர்களுக்கான மாத மதிப்பூதியமும் 20,000 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.
ஜெகன் பாண்டியனை திமுக வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு