மதச்சார்பற்ற தன்மையை தொடர்வீர்கள்.. மாநில உரிமைகளை மதிப்பீர்கள் என நம்புகிறோம்.. மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து
அரசியலமைப்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உண்மையாகப் பணியாற்றுவீர்கள் என்றும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைத் தொடர்வீர்கள் என்றும் நம்புவதாக பிரதமராகப் 3வது முறையாக பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மீண்டும் மோடி ஆட்சி
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்து மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் பெரும்பான்மை பலத்தோடு மீண்டும் ஆட்சி அமைப்போம் என பாஜக கூறி வந்த நிலையலி,் 240 தொகுதிகளை மட்டுமே தனித்து பெற்றது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மோடி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளார். நேற்று இரவு குடியரசு தலைவர் மாளிகையில் பதவி பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது மோடியுடன் கூட்டணி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மாநில உரிமைகளை மதித்து நடப்பீர்கள்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகள். பிரதமராகத் தாங்கள். அரசியலமைப்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உண்மையாகப் பணியாற்றுவீர்கள் என்றும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைத் தொடர்வீர்கள் என்றும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலை முன்னெடுப்பீர்கள் என்றும், மாநில உரிமைகளை மதித்து நடப்பீர்கள் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பீர்கள் என்றும் நம்புகிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.. இளம் அமைச்சர் முதல் வயதான அமைச்சர் வரை.. முழு பட்டியல் இதோ..!