Navi Mumbai Tamil Sangam நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்ச்சங்க கட்டிடத்திற்கு நிதி உதவி

நவி மும்பையில் தமிழ்ச்சங்கத்தின் கட்டிடம் உள்ளது இந்த கட்டிட வளாகத்தை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கட்டிட பணி முடிவடைய கூடுதல் தொகை தேவைப்பட்டது.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

இப்படி இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? முதல்வர் ஸ்டாலினை வச்சு செய்யும் டிடிவி.தினகரன்..!

Salem : கடல் கடந்த காதல்..பிரான்ஸ் நாட்டு மணமகனை திருமணம் செய்த சேலத்து மணமகள் !

ரூ.50 லட்சம் வழங்கிய முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 லட்சம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 10.12.2021 வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று. கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

அவ்வகையில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூபாய் 1 கோடியே 25 இலட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில்கள். தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு. தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. மகேசன் காசிராஜன். இ.ஆ.ப. தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதையும் படியுங்கள்

அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது..வானிலை மையம் அப்டேட் !