Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது..வானிலை மையம் அப்டேட் !

Tamilnadu rain : கன்னியாகுமரி, திருநெல்வேலி வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

Moderate rain is likely in Karur and Tiruvallur districts during the next 3 hours
Author
First Published Jun 28, 2022, 8:15 AM IST

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கோடைக்காலத்தை போல் வெயில் வெளுத்து வாங்குகிறது. அதேசமயம் தமிழகம் முழுக்க பரவலாக அவ்வப்போது மழை பெய்தும் வருகிறது.

Moderate rain is likely in Karur and Tiruvallur districts during the next 3 hours

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நேற்று   மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !

இன்றுதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29 தேதி மற்றும் 20ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios