தமிழக அமைச்சரவை வருகின்ற 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணியளவில் கூடுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை வருகின்ற 14ம் தேதி கூடுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்ககொள்ளப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக மக்களை சென்று சேர்ந்துள்ளதா எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
