வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் என்ன செய்ய வேண்டும்.?? வரிசையாக பட்டியலிட்டு உத்தரவிட்ட ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Stalin has listed the duties to be performed by DMK agents during the counting of votes KAK

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நேற்றோடு முடிவடைந்தது. இதனையடுத்து நாளை மறுதினம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இந்தநிலையில் வாக்குச்சாவடிக்கு செல்லும் திமுக மற்றும் கூட்டணி கட்சி முகவர்கள் என்ன செய்ய வேண்டும் என பட்டியலிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 

திமுக முகவர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு என்ன.?

  • வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும்.
  • தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் இரண்டு வகைப்படும். 1. ETPBS, 2. சாதாரண தபால் வாக்கு. அதற்குரிய வழிமுறைகள் உங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளை செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
  • எப்படி EVM வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
  • வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகளில் மட்டும்தான் துவங்க வேண்டும். முதல் அரை மணி நேரம் கழித்துத்தான் EVM வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும்.
  • தபால் வாக்குகள் எண்ணிக்கையை என்ன காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் துரிதமாக எண்ணி அதனுடைய முடிவுகளைத் தருவதை உறுதிசெய்ய வேண்டும்.
  • EVM இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக அந்த EVM இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3வது முறை மீண்டும் மோடி.. அடித்து கூறும் கருத்துக்கணிப்பு முடிவுகள்.. காங்கிரஸ் சொதப்பியது எங்கே?

 

 

 

 

  • இயந்திரங்களின் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு, இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை படிவம் 17C-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • 17C படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் EVM இயந்திரத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை EVM இயந்திரத்தில் பார்த்து. சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  •  இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
  • வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறிப்பாக RO Table-க்கு செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர் இதுகுறித்த கையேடுகளையும், சட்டங்களையும் அறிந்தவராக இருத்தல் நலம்.

சிக்கிம், அருணாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.! முன்னிலை யார்.? ஆட்சியை கைப்பற்றப்போவது யார்.?

Stalin has listed the duties to be performed by DMK agents during the counting of votes KAK

வாக்கு எண்ணிக்கை ஒத்துபோகிறதா.?

  • வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து VVPAT இயந்திரங்களை எடுத்து அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, EVM இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • படிவம் 17C-இல் நிரப்பப்படும் வாக்குகள் சரியாக படிவம் 20-இல் எழுதப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • படிவம் 20-இல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு, படிவம் 20-இல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios