விடுமுறையில் சிறப்பு வகுப்பா ? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை !
பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.
இதனை அடுத்து, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்
இந்நிலையில் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக சில தனியார் பள்ளிகள் மீது புகார் இருந்துள்ளது.தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார் வந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. ஒரு வேளை பொதுத்தேர்வு எழுதும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று அரை நாள் மட்டும் சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க..ஆஃபர் லெட்டரை ரத்து செய்யும் விப்ரோ, இன்ஃபோசிஸ் & டெக் மஹிந்திரா.! அதிர்ச்சியில் ஐ.டி இளைஞர்கள் !!