ஆஃபர் லெட்டரை ரத்து செய்யும் விப்ரோ, இன்ஃபோசிஸ் & டெக் மஹிந்திரா.! அதிர்ச்சியில் ஐ.டி இளைஞர்கள் !!
கொரோனா பரவத் தொடங்கிய பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்தன.
இப்போது தொற்று குறைந்த பல்வேறு நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் சில நிறுவனங்கள் இன்னும் வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் ஃபரம் ஹோம் சேவைக்கு அனுமதி அளித்து வருகின்றன. இதை பயன்படுத்திக்கொண்டு பல ஊழியர்கள் தங்களது வேலைக்கு வெளியில் உள்ள தேவைகளை பயன்படுத்தி பகலில் ஒரு வேலை, இரவில் பகுதி நேரத்தில் ஒரு வேலை என செய்து வருகின்றனர்.
இன்போசிஸ் நிறுவனமும் தங்களது ஊழியர்கள் நடத்தை விதிப்படி மூன் லைட்டிங் (moonlighting) என அழைக்கப்படும் இரண்டு வேலையைச் செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், 'இரண்டு நேரமும் கிடையாது, இரவு வேறு வேலையும் கிடையாது' மற்றும் 'இரட்டை வாழ்க்கையும் கிடையாது' என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்
பிசினஸ்லைனின் சமீபத்திய அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான - இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா - பல மாதங்களாக ஆன்போர்டிங் செயல்முறையைத் தாமதப்படுத்திய பின்னர் வழங்கப்பட்ட சலுகைக் கடிதங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. சுமார் 3 - 4 மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைகளுக்கு விண்ணப்பித்ததாக கூறுகின்றனர்.
தற்போது வேலைவாய்ப்பு கடிதம் ரத்து செய்யப்படுவதாக கடிதம் வந்துள்ளது. ‘எங்கள் கல்வித் தகுதியை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை. அதனால் எனவே உங்கள் சலுகை செல்லாது’ என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மந்தநிலை இருப்பதாக பேசப்படும் நேரத்தில், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெறுவது அல்லது திரும்பப் பெறுவது போன்ற செய்திகள் வந்துள்ளன.
கூகுள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஜாம்பவான்கள் கூட புதிய பணியமர்த்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர். இந்திய ஐடி நிறுவனங்களைப் பொறுத்த வரையில், ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை 3-4 மாதங்கள் தாமதப்படுத்தி உள்ளனர். லிங்க்ட்இன் போன்ற சமூக ஊடக தளங்களில் இதுகுறித்து இளைஞர்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி