திருப்பதி பிரம்மோற்சவம் 27ல் தொடக்கம் .. சிறப்பு பேருந்துகள் எந்தெந்த வழிகளில் இயக்கம்..? முழு விவரம்..
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். மேலும் கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால், அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தாண்டு பிரம்மோற்சவத்தை வெகு விமர்சையாக நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் பிரம்மோற்சம் அக்டோபர் 5 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த 9 நாட்களும் நான்கு மாட வீதிகளில் சாமி ஊர்வலம் விமர்சையாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் தொடங்க நாளான செப்டம்பர் மாதம் 27-ம் தேதி மாலை சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்க உள்ளார்.
மேலும் படிக்க:அதிமுக பொதுக்குழு.. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? 127 பக்க தீர்ப்பு வெளியானது..!
முக்கிய நிகழ்வுகளான அக்டோபர் மாதம் 1ம் தேதி கருட சேவையும் அக்டோபர் 2-ம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி ஊர்வலம் நடைபெறவுள்ளது. 3ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், பிரம்மோற்சவத்தின் போது மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் பெற்றோர் செல்லும் தரிசனமும், விஜபி தரிசனமும் ரத்து செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகளும் காளஹஸ்தி வழியாக 55 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும் படிக்க:ஓபிஎஸ் அணிக்கு செல்கிறாரா செங்கோட்டையன்..? இபிஎஸ்ஐ சந்தித்த பிறகு திடீர் விளக்கம்
அதே போல் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகளும் சித்தூர் வழியாக திருப்பதிக்கு 65 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. குமரி, திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, குப்பம் வழியாக 15 பேருந்துகளும் கள்ளக்குறிச்சியில் இருந்து 8 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.