சென்னை புறநகர் மின்சார ரயிலில் புதிய மாற்றம்..! அதிரடி அறிவிப்பை வெளியிட போகும் தெற்கு ரயில்வே
சென்னை புறநகர் மின்சார ரயிலில் குளிர்சாதன பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

மின்சார ரயிலில் புதிய மாற்றம்
சென்னை மக்கள் பணிக்கு செல்லவும், முக்கிய இடங்களுக்கு அவரச தேவைக்காக சென்று வர பேருந்துக்கு இணையாக புறநகர் மின்சார ரயில் சேவை மிகுந்த பயன் உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட தூரத்தில் இருந்து பணிக்கு வரும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவை வழங்கப்படுகிறது. இந்தநிலையில் குளிர்சாதன வசதி கொண்ட மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தி வரும் நிலையில்,
சென்னை புறநகர் மின்சார ரயிலிலும் ஏசி ரயில் பெட்டி இணைக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. இதனை அடுத்து ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேக்கு மின்சார ரயிலில் குளிர் சாதன பெட்டி இணைக்க பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குளிர்சாத பெட்டி இணைக்க திட்டம்
அதன் படி மும்பை மின்சார ரயிலுக்கு சென்னை ஐசிஎப்பில் இருந்து குளிர்சாதன பெட்டிகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது. அதே போல சென்னை மின்சார ரயிலுக்கும் குளிர்சாதன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக 2 முதல் 3 பெட்டிகளை இணைத்து சோதனை செய்யப்படவுள்ளதாகவும், அது பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்டமாக விரிவு படுத்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நீண்ட தூரம் பயணம் செய்யப்படும். சென்னை பீச்- திருமால்பூர், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயிலில் குளிர் சாதன பெட்டிகள் பொறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்