தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸில் செல்ல இனி கோயம்பேடு போகாதீங்க;கிளாம்பாக்கத்திற்கே செல்லுங்க-விவரம் இதோ
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல இனி கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றம்
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தொழில் நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகளும் மாற்றம் செய்யப்பட்டே வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பூக்கடை பகுதியில் இயங்கி வந்த சென்னை பேருந்து நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. தற்போது கோயம்பேடு பகுதியில் அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில்,
சென்னைக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.
கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்
இதனையடுத்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள் சேவையும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் கிளாம்ம்பாக்கத்தில இருந்தே அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எத்தனை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. எந்த நடை மேடையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 30ஆம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகளின் புறப்பாடுகள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கம்
பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது, தாம்பரம் வரை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்