வடமாநிலங்களில் தமிழக லாரிகளை குறிவைத்து அதிகாரி போர்வையில் கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகாரிகள் போன்று தமிழக லாரிகளை பின்தொடரும் மர்ம நபர்கள் லாரியில் இருந்து பொருட்களை கொள்ளையடிக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த கனரக வாகனங்கள் பழங்கள், காய்கறிகள், உணவு தானிங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அப்பப்பட்ட சூழலில் தமிழகத்தில் இருந்து வரும் லாரிகளை கொள்ளை கும்பல் குறி வைத்து கொளை சம்பவத்தில் ஈடுபடும் நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகளை வழி மறிக்கும் கொள்ளையர்கள் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்கின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சரக்கு ஏற்றச் சென்ற லாரி ஒன்று மீண்டும் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தது.
திருவாரூரில் ஓர் உலக அதிசயம்; தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய அன்பு மகன்
அப்போது லாரியை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் லாரியின் காப்பீடு காலாவதியாகிவிட்டது. பணம் கட்டவில்லை உள்ளிட்ட காரணங்களைக் கூறி லாரியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து நிறுத்த முயற்சிக்கின்றனர். அவ்வாறு பின்தொடர்ந்து வரும் இருசக்கர வாகனங்களில் பதிவு எண் இல்லாத காரணத்தால் சந்தேகமடையும் லாரி ஓட்டுநர்கள் லாரியை நிறுத்தாமல் செல்கின்றனர். ஆனால் அவர்களை விடாமல் சுமார் 15 கி.மீ. வரை பின்தொடரும் மர்ம நபர்கள் எப்படியாவது லாரியை நிறுத்தி அதிலிருந்து பணம், செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொலை குற்றவாளியை சயின்டிஸ்டாக மாற்றிய கோவை மத்திய சிறை; சிறையில் உருவான இ சைக்கிள்