கோவையில் தொடர் செயின் பறிப்பு சம்பவம்.. பலே வேலை பார்த்த தலைமை காவலர் - நீதிமன்றத்தில் ஆஜர்!
Coimbatore Police Arrested : கோவையில் பலரிடம் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த காவலர் ஒருவர் கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிற்குள் சட்ட ஒழுங்கை பாதுகாத்து பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களே சில நேரங்களில் தவறான வழியில் செல்வது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவையில் பல பெண்களிடம் தொடர் சங்கிலி பரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் சபரிகிரி என்ற தலைமை காவலர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியள்ளது. காவலர் ஒருவரே இப்படிபட்ட செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
நடிகனாக அல்ல... தமிழக வெற்றி கழகத்தின் தலைவனாக வந்து ரசிகர்களை சந்தித்த விஜய் - வைரலாகும் வீடியோ