செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்க்கு மாற்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரண்டு வழக்குகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவரது கைது சட்டப்படி செல்லும் என உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
முதன்முறையாக ராமநாதபுரம் விசிட்: மீனவர்களை நாளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
அதன்படி, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஆகஸ்ட் 8 முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரித்தது. அதன்பிறகு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அன்றைய தினமே அவர் மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையையும், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி அவரது வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாகத்துறை தாக்கல் செய்துள்ள புகாரில், விசாரணையின் போது நம்பத்தகுந்த விளக்கங்களை செந்தில் பாலாஜி அளிக்கவில்லை எனவும், போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கிரிமினல் கூட்டு சதி நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.