ஆட்சி மாற்றத்தின் அடையாளம் தான் செங்கோல்.. ஆதாரம் உள்ளது.. திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்

ஆட்சி, அதிகாரம் மாற்றத்தை குறிக்கும் வகையில் இந்த செங்கோல் அப்போதைய திருவாடுவடுதுறை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் தங்க செங்கோலை நேருவிடம் வழங்கினார் என்று கூறப்படுகிறது.

Sengol is the symbol of regime change.. Thiruvavaduthurai Atheenam Explanation

வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் நிறுவப்பட உள்ளது. இதில் சோழர் கால வரலாற்று சிறப்பு மிக்க சோழர் கால செங்கோலை மக்களவை தலைவர் இருக்கை அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற போது இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்த மௌண்ட் பேட்டன், நாட்டின் முதல் பிரதமர் மோடியிடம் இந்த செங்கோலை வழங்கினார்.

ஆட்சி, அதிகாரம் மாற்றத்தை குறிக்கும் வகையில் இந்த செங்கோல் அப்போதைய திருவாவடுதுறை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் தங்க செங்கோலை நேருவிடம் வழங்கினார் என்று கூறப்படுகிறது. சோழர் காலத்தில் இருந்தே அரசர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது திருவாடுதுறை ஆதினத்தில் இருந்து இந்த செங்கோலை கொடுப்பார்கள். அந்த வகையில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து சுதந்திரம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை குறிக்கும் வகையில் இந்த செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பிரதமர் மோடி வரலாற்று பிழையை திருத்துகிறார்; செங்கோல் குறித்து டுவிட்டரில் பெருகும் ஆதரவு!!

எனினும் நாடு சுதந்திரம் அடைந்த போது, செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரித்துள்ளது. 1947 ஆகஸ்ட் மாதம், ஜவஹர்லால் நேருவிடம் ஒரு கம்ப்பிரமான செங்கோல் வழங்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படுவதன் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படுவது பொய்யானது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருவாவடுதுறை ஆதீனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 1974-ல் ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப்பெற்றது குறித்த வரலாற்ற பொய் என்று குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாக தெரியவருகிறது.

ஆட்சி மாற்றத்தின் போது அதனை அடையாளப்படுத்தும் சடங்கை செய்விக்க அழைக்க பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகளை உட்பட பல வகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்முறைய ஆதீனகர்த்தர், தக்க செங்கோல் செய்வித்து முறையான சடங்குகளில் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அதை கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கொடுக்க செய்தார்கள். பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள் செங்கோல் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாக தெரிவித்தார்.

அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக இந்த சடங்குகளும், நிகழ்வுகளும் பொய் என்று கூறுதல், எமது நம்பிக்கை தன்மையின் மீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தை குறைக்க முயல்தல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை, தவிர்க்கப்பட வேண்டியவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை.. இதை திசை திருப்பவே ரெய்டு.. ஆர்.எஸ்.பாரதி பகீர் தகவல்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios