Asianet News TamilAsianet News Tamil

1947-ல் தயாரிக்கப்பட்ட செல்கோல் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது... ஆனால் தற்போது எவ்வளவு தெரியுமா?

1947 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட செல்கோல் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக உம்மிடி பங்காரு செட்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

sengol cost in 1947 was charged Rs 15000
Author
First Published May 27, 2023, 12:22 AM IST

1947 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட செல்கோல் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக உம்மிடி பங்காரு செட்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மிடி சுதாகர், அவரின் மகன் உம்மிடி பாலாஜி, நாங்கள் தயாரித்த செங்கோல் நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. மத்திய அரசின் அழைப்பின்படி எங்களது குடும்பத்தில் 15 நபர்கள் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளோம். உம்மிடி பங்காரு நிறுவனம் சார்பில் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செங்கோல் கிட்டதட்ட 5 அடி உயரம் கொண்டது, ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை கொண்டது.

இதையும் படிங்க: லஸ்ஸியில் பூஞ்சை இல்லை....அந்த வீடியோ போலி... !!

வெள்ளியில் செய்து தங்கமுலாம் பூசப்பட்டது. செங்கோலை 10, 12 நபர்கள் சேர்ந்து, வெறும் கைகளால் சுமார் ஒரு மாதம் முழுவதும் செய்து முடித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் செங்கோல் மீண்டும் வைக்கப்படுவதன் மூலம் வரலாறு மீண்டும் திரும்புவது எங்களுக்கு பெருமை தருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் சொன்னபடி செங்கோலை செய்து கொடுத்தோம். செங்கோலை செய்யும்போது எனது தந்தைக்கு 14 வயது இருக்கும். அவர் அதனை பார்த்துள்ளார். உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் 4 ஆவது தலைமுறையான எங்களுக்கு அந்த செங்கோல் பற்றி இப்போதுதான் தெரியவந்தது.

இதையும் படிங்க: வெளியானது சுகாதாரக் குறியீடு அறிக்கை.. சுகாதாரக் குறியீடு அறிக்கையில் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா முதலிடம்!!

அடுத்து எங்களின் வாரிசுகள் 5 ஆவது தலைமுறையாகும். திருவாடுதுறை ஆதினம் கூறியபடி செய்து அந்த செங்கோலை அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டு, பின்னர் அலகாபாத் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை மத்திய கலாசாரத்துறை அதிகாரிக்ள 3, 4 மாதங்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். நாங்கள் 1947 ஆம் ஆண்டில் ஆதீனத்திடம் நாங்கள் தயாரித்த செங்கோலை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தோம். செங்கோலை டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். 2023 ஆம் ஆண்டின் விலையின் படி 18 லட்சம் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios