Asianet News TamilAsianet News Tamil

வெளியானது சுகாதாரக் குறியீடு அறிக்கை.. சுகாதாரக் குறியீடு அறிக்கையில் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா முதலிடம்!!

கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்கள் 2020-21 ஆம் ஆண்டுக்கான கொரோனா ஆண்டிற்கான நிதி ஆயோக்கின் வருடாந்திர சுகாதாரக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

niti aayog health index 2020-21 kerala top performer during covid pandemic delhi lowest ranking
Author
First Published May 26, 2023, 9:31 PM IST

கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்கள் 2020-21 ஆம் ஆண்டுக்கான கொரோனா ஆண்டிற்கான நிதி ஆயோக்கின் வருடாந்திர சுகாதாரக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. 24 சுகாதார செயல்திறன் குறிகாட்டிகளை உள்ளடக்கிய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை அளவிடும் வருடாந்திர சுகாதார குறியீடு, 2017 இல் நிதி ஆயோக்கால் தொடங்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக வங்கியுடன் இணைந்து ஆயோக் குறியீட்டை வெளியிடுகிறது. 2020-21 (ஐந்தாவது) சுகாதாரக் குறியீட்டு அறிக்கை டிசம்பர் 2022க்குள் வெளியிடப்பட வேண்டும் என்றாலும், அது இன்னும் பொதுவில் வரவில்லை. தற்போது நிதி ஆயோக் அறிக்கையை, சுகாதார அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டதாக அறியப்படுகிறது. இதுதொடர்பாக NITI ஆயோக் அதிகாரியை தொடர்பு கொண்டபோது, அந்த அறிக்கை சரியான நேரத்தில் வெளியிடப்படும், என்றார். சுகாதாரக் குறியீடு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இரண்டு அளவுருக்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறது.

இதையும் படிங்க: கனமழையால் நகைக்கடையில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட 2.50 கோடி மதிப்பிலான நகைகள்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என தனித்தனியாக வகைப்படுத்தப்படுகின்றன. பின்னர் அவற்றின் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. 19 பெரிய மாநிலங்களில், கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை, ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில், முறையே முதல்,இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்து, முதல் மூன்று இடங்களில் உள்ளன. பீகார் (19வது), உத்தரபிரதேசம் (18வது), மத்திய பிரதேசம் (17வது) ஆகியவை பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. அதிகரிக்கும் செயல்திறனைப் பொறுத்தவரை, 2019-20 ஆம் ஆண்டின் செயல்திறனைக் காட்டிலும், 2020-21 ஆம் ஆண்டில் ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் ஒடிசா ஆகியவை செயல்திறன் மிக்கவர்களாக வளர்ந்துள்ளன.எட்டு சிறிய மாநிலங்களில், திரிபுரா சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து சிக்கிம் மற்றும் கோவா உள்ளது; அருணாச்சல பிரதேசம் (6வது), நாகாலாந்து (7வது), மணிப்பூர் (8வது) ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன.

இதையும் படிங்க: செல்போனை எடுக்க அணையில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்… அரசு அதிகாரி அராஜகம்!!

மேலும் எட்டு யூனியன் பிரதேசங்களில், ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது. டிசம்பர் 27, 2021 அன்று வெளியிடப்பட்ட 2019-20 ஆம் ஆண்டிற்கான கடைசி (நான்காவது) சுகாதாரக் குறியீட்டு அறிக்கையில், பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்திறன் மிக்கவர்களாக கேரளாவும் தமிழ்நாடும் இடம் பெற்றன. தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகியவை ஆண்டு செயல்திறன் அதிகரிப்பு அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களாக இருந்தன. சிறிய மாநிலங்களில், மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகியவை ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன, அதே நேரத்தில் 2019-20 இல் மணிப்பூர் (6 வது), அருணாச்சல பிரதேசம் (7 வது) மற்றும் நாகாலாந்து (8 வது) கீழே இருந்தன. யூனியன் பிரதேசங்களில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ முதலிடத்திலும், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் கடைசியாக இருந்தன. 

Follow Us:
Download App:
  • android
  • ios