Asianet News TamilAsianet News Tamil

செல்போனை எடுக்க அணையில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்… அரசு அதிகாரி அராஜகம்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் செல்போன் நீரில் விழுந்துவிட்டதால் நீர்த்தேக்கத்தில் இருந்த மொத்த நீரையும் அதிகாரி ஒருவர் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

officer pumped out water For 3 days after his phone fell into reservoir
Author
First Published May 26, 2023, 8:54 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் செல்போன் நீரில் விழுந்துவிட்டதால் நீர்த்தேக்கத்தில் இருந்த மொத்த நீரையும் அதிகாரி ஒருவர் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் தனது விடுமுறையைக் கழிக்க கெர்கட்டா அணைக்குச் சென்றுள்ளார். அப்போது செல்பி எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக தனது விலையுயர்ந்த செல்போனை நீர்த்தேக்கத்தில் கைத்தவறிப்போட்டுள்ளார்.

இதையும் படிங்க: செங்கோல் குறித்து காங். விமர்சனம்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி!!

இதை அடுத்து அந்த செல்போனை எடுக்க வேண்டும் என்பதற்காக அந்த அணையில் இருந்த மொத்த நீரையும் வெளியேற்ற முடிவு செய்தார். அதன்படி நீர்த்தேக்கத்தில் இருந்த சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார். இந்த நீர் மூலம் 1,500 ஏக்கர் நிலத்திற்குப் பாசனம் செய்திருக்க முடியும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கனமழையால் நகைக்கடையில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட 2.50 கோடி மதிப்பிலான நகைகள்

இதுக்குறித்து அந்த அதிகாரிக் கூறுகையில், தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில், இருந்ததாகவும் தான் உயர் அதிகாரிகளிடம் இருந்து வாய்மொழியாக அனுமதி வாங்கிவிட்டே இதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios