லஸ்ஸியில் பூஞ்சை இல்லை....அந்த வீடியோ போலி... !!
பிரபல அமுல் நிறுவனத்தின் தயாரிப்பான லஸ்ஸியில் பூஞ்சை இருப்பதாக கூறும் வீடியோ வைரலானதை அடுத்து அதுகுறித்து அந்நிறுவனம் தெளிவாக விளக்கி உள்ளது.
குஜராத்தை தலைமையிடமாக கொண்டது அமுல் நிறுவனம். இந்நிறுவனம் தங்களது விற்பனையை நாடு முழுவதும் செய்து வருகின்றன. இந்நிலையில் அமுல் தயாரிப்பான லஸ்ஸி காலாவதி தேதிக்கு முன்னரே கெட்டுப் போனதாகவும், அதில் பூஞ்சை படர்ந்து இருப்பதாக வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அந்நிறுவனம் மறுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், " எங்களது நிறுவன தயாரிப்பில் உள்ள லஸ்ஸி கெட்டுப் போனதாக வீடியோ ஒன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது ஒரு போலியான செய்தி ஆகும். அந்த வீடியோவை உருவாக்கியவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. இருப்பிடமும் வெளியிடப்படவில்லை.
மேலும் இந்த வீடியோ போலித்தனமாகவும், தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி தேவையற்ற அச்சத்தை பரப்பும் நோக்கத்தில் இருக்கிறது. வீடியோவில் கூறப்பட்டுள்ள கூற்றுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். மற்றும் இதுபோன்ற தவறான தகவல்களால் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம்.
இதையும் படிங்க: 25 லட்சமாக உயர்வு.! அரசு சாரா ஊழியர்களுக்கு குட் நியூஸ் - முழு விபரம்
அமுல், அதன் தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு உறுதியளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் துல்லியமான தகவலைத் தேடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் எந்தவொரு தெளிவுபடுத்தல்கள் அல்லது கேள்விகளுக்கு நேரடியாக அணுகுமாறு தனிநபர்களை வலியுறுத்துகிறது.