Asianet News TamilAsianet News Tamil

அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இது தான் காரணம்.! புதிய குண்டை தூக்கிப்போட்ட செல்லூர் ராஜூ

குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில் அதிமுக அடிபட்டு விட்டோம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

Sellur Raju says AIADMK relegation to the 3rd place in Madurai at the end of the parliamentary elections has caused emotional distress KAK
Author
First Published Jul 15, 2024, 12:37 PM IST | Last Updated Jul 15, 2024, 2:58 PM IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவருவுச் சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காமராஜர் ஆட்சி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,

சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்பொழுது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈவிகேஸ் இளங்கோவன் கூறுகிறார். திமுகவை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என இது எந்த விதத்தில் நியாயம்.? என கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரய மரணம் நடைபெறுவதாக விமர்சித்தார். 

Armstrong murder : உயிருக்கு ஆபத்து.!! போலீஸ் பாதுகாப்பு கொடுங்க- பொன்னை பாலு மனைவி கமிஷனரிடம் கதறல்

சர்ச்சை ஆடியோ.?

அதிமுக தொண்டரை விமர்ச்சித்த சர்ச்சை ஆடியோ தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், சமூகவலைதளத்தில் வெளியான அந்த ஆடியோ குறித்து எனக்கு ஏதும் தெரியாது. நேற்று ஒரு பணி நிமித்தமாக நான் வெளியில் சென்று இருந்ததால் அது குறித்து எனக்கு தெரியாது. அது என்னவென்று கேட்ட பிறகு அதுகுறித்து விளக்கம் அளிப்பதாக கூறினார்.  அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட மதுரையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,  

கோடை காலத்தில் வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம், ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.? குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர்.  இதில் அதிமுகவினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம் என கூறினார்.

மதுரை ஓட்டு யாருக்கு சென்றது.?

மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான் தந்துள்ளது. மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் சௌராஷ்டிரா அமைப்பினர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த வட மாநிலத்தவர்கள், பிராமின்ஸ் உள்ளிட்டோர் மோடிக்கு வாக்களித்துள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

உண்மை குற்றவாளியை கண்டுபிடிங்க.! சிபிஐக்கு வழக்கை மாற்றுங்க- ஆளுநரை சந்திக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி.?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios