Asianet News TamilAsianet News Tamil

சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியாக அண்ணாமலை.. செல்லூர் ராஜு கிண்டல்

 சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியாக அண்ணாமலை தினந்தோறும் தமிழக அரசியலில் பிதற்றிக் கொண்டு இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். 

Sellur Raju has criticized Madurai BJP candidate who will get less votes than Nota KAK
Author
First Published Apr 16, 2024, 3:06 PM IST

மோடி வாக்குறுதி என்ன ஆச்சு.?

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானம் பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களுடைய ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற்ற கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. மதுரை பொருத்தமட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் களம், இந்த களம் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்பது ஒரு வரலாற்று உண்மை. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது  15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் வரும் என்று சொன்னார்கள். தற்போது அதன் நிலை என்ன?

ஒரு ஓட்டுக்கு 10ஆயிரம் கொடுக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு 300 ரூபாயே திமுக கொடுத்து வருகிறது- R.B.உதயகுமார்

  500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்

இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தால்,  பெட்ரோல் டீசல் 75 ரூபாய்க்கு 65 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று கூறுகிறார். அதை பார்க்கும் போது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. 500 ரூபாய்க்கு எரிவாயு எப்படி கொடுக்க முடியும் என்பது பாமர மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கே நன்றாக தெரியும் என கூறினார்.  மதுரையில் அதிமுகவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.  தற்பொழுது அவர் திமுக தொண்டர்களை கூட குறிப்பாக அவரை உயர்த்துவிட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கிவிட்ட திமுகவினரை கூட அவர் சரிவர சந்திப்பதில்லை. அவர் எப்போது பார்த்தாலும் கீழடி என்றுதான் பேசுகிறார் ஆனால் கீழடி என்பது நாங்கள் கொண்டு வந்த திட்டம். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு அவர்கள் ஸ்டிக்கர்  ஒட்டுகிறார்கள்

சிங்கம் சிறுத்தை நடுவே ஆடு

தமிழகத்தில் நன்றாக மாட்டிக்கொண்ட ஆடாக (அண்ணாமலை )இருக்கிறார். ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம் சிறுத்தை, இந்த சிறுத்தைக்கும் சிங்கக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியாக இருக்கிறார்.  என்ன பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். மதுரை பாஜக வேட்பாளர் எனக்கும் நல்ல பழக்கமானவர்கள் அன்பாக பழகக்கூடியவர்தான்.  அவரை மதுரை களத்தில்  நிறுத்தி இருக்கிறார்கள். அவர் நோட்டாவை விட கம்மியான வாக்குகளை பெறுவார். அவர்கள் மதுரை ஆன்மீக பூமி, எனவே இந்த ஆன்மீக பூமியில் பாரதிய ஜனதா நாம் வாக்குகள் வாங்கலாம் என்று சொல்கிறார்கள். அந்த கதை இங்கு உதவாது.  இந்த கத்திரிக்காய் கதை எல்லாம் இங்கே நடக்காது.  தமிழகம் முழுவதும் இன்றைக்கு பாஜக வெற்றி பெறாது.  ஒரு நாளிதழ் மற்றும் யூட்யூபை கையில் வைத்துக்கொண்டு செயற்கையாக அவர்கள் அவர்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். 

Annamalai: மூன்றாம் உலகப் போரை தடுப்பதற்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - கோவையில் அண்ணாமலை பேச்சு

பாலாப்பழம் பழுக்காது

பொதுவாக டிரைலர் நன்றாக இருக்கும். ஆனால் படம் சொதப்பு விடும். படம் பிளாப் ஆகிவிடும் அந்த வகையில் தான் பாஜகவினுடைய ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது ஆனால் ரிசல்ட் பிளாப் ஆகிவிடும். மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலை தான் வரும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக- திமுக தான். எங்களுடைய எதிரி இந்த திமுக தான் என தெரிவித்தார். ஓபிஎஸ் தொடர்பாக பேசியவர், இங்கே(அதிமுக) எங்களிடம் எப்படி இருந்தவர்,  எப்படி இருந்த மனுஷன் இன்றைக்கு பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு அவர் நிற்கக்கூடிய காட்சியை பாருங்கள்.  பலாப்பழம் பழுக்காது, அழுகித்தான் போகும். உண்மையிலேயே மனசாட்சி இல்லாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தன்மானம் ரோஷம் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓபிஎஸ் போய் ?? தேர்தலில் நிற்கிறார் என செல்லூர் ராஜூ விமர்சித்தார்.  

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு ஏன் இல்லை: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Follow Us:
Download App:
  • android
  • ios