ஒரு ஓட்டுக்கு 10ஆயிரம் கொடுக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு 300 ரூபாயே திமுக கொடுத்து வருகிறது- R.B.உதயகுமார்


திமுகவினர் பணப்பட்டுவாடாவை துவங்கிவிட்டனர், கொள்ளையடித்த பணத்திலிருந்து ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுப்பார்கள் என பேசப்பட்ட நிலையில், இன்று ஒரு ஓட்டுக்கு 300 ம் 500 ம் கொடுப்பது மக்களிடத்திலே ஏமாற்றத்தை அளித்துள்ளது என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 

RB Udayakumar has accused DMK of giving money to voters KAK

தேனியில் இறுதி கட்ட பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலை பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், இன்று காலை முதல் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தநிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்க ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர்,   திமுகவில் நிற்பவர் நமது சொந்தக்காரர் தான் நமது அண்ணன் தான், மூன்று முறை எம்எல்ஏ , நாடாளுமன்ற மேல் அவை உறுப்பினராக இருந்தார்.

 திமுக- பாஜக வேட்பாளர்கள் யார் தெரியுமா.?

அவர் இரட்டை இலையில் இருக்கும் வரை தங்கதமிழ்ச் செல்வன்., இப்போது உதயசூரியனுக்கு போனதிலிருந்து தகரதமிழ்ச்செல்வனா மாறிட்டார் என விமர்சித்தார்.இன்னொரு வேட்பாளரும்  நம்ம அண்ணன் தான் சொந்தக்காரர் தான்,  அவர் 14 ஆண்டுகள் உங்களை மறந்துவிட்டு, உங்களை தள்ளி வைத்துவிட்டு (தேனி மக்களை) என்ன ஏதுனு கூட கேக்கவில்லை., ஆனால் இப்போது தனது எஞ்சிய வாழ்நாளை காப்பாற்றிக் கொள்ளவும், வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக தான் உங்களிடத்தில் வாக்கு கேட்டு வருகிறாரே தவிர உங்களை வாழ வைக்க அல்ல என விமர்சித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்,.  அதிமுகவை எதிர்த்து நிற்கும் இரு வேட்பாளர்களும் இரட்டை இலையால் அடையாளம் காணப்பட்டவர்கள் .

வாக்காளர்களுக்கு 300 ரூபாய் கொடுக்கும் திமுக

இன்று சுயநலத்திற்காக தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சுயேட்சை சின்னத்திலும், உதயசூரியன் சின்னத்திலும் நிற்கின்றார்கள் அவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இன்று ஜீ ஸ்கோயரில் கொள்ளை அடித்த பணத்தின் மூலம் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுப்பார்கள் என பேசப்பட்ட நிலையில் இன்று ஒரு ஓட்டுக்கு 300 ம் 500 ம் கொடுப்பது மக்களிடத்திலே ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்து அது மக்களின் பணம் என மக்கள் வாங்கி கொண்டு பட்டை நாமத்தை கொடுப்பார்கள் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

மோடிக்கு எதிராக ராகுலும், ஸ்டாலினும் வியூகம் வகுத்து களமாடி வருகின்றனர் - பிரசாரத்தில் திருமா பேச்சு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios