Asianet News TamilAsianet News Tamil

மின் கம்பம் விழுந்து ஜூடோ வீரர் விக்னேஸ்வரன் கால் இழப்பு.. விளையாட்டு துறை சாதிக்க வேண்டிய கனவு சிதைவு- சீமான்

மின்கம்பம் சாய்ந்த விபத்தில் காலினை இழந்த ஜூடோ வீரர் விக்னேசுவரனுக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். 

Seaman requests government job for athlete who lost his leg due to electric pole
Author
First Published Jul 30, 2023, 8:08 AM IST

ஜூடோ வீரர் கால் மீது விழுந்த மின் கம்பம்

ஜூடோ வீரராக பயற்சி எடுத்து வந்த மதுரையை சேர்ந்த விக்னேஸ்வரன் கணுக்கால் பகுதியில் மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் எதிர்கால லட்சியாக இருந்த ஜூடோ விளையாட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மதுரை கோச்சடை பகுதியில் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் சிக்கி, இளம் ஜூடோ வீரர் அன்புத்தம்பி விக்னேசுவரன் தனது இடது கணுக்காலை இழந்த செய்தி மிகுந்த மனவலியைத் தருகிறது. மின்வாரிய ஊழியர்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலும்,

Seaman requests government job for athlete who lost his leg due to electric pole

இழப்பீடு, அரசு வேலை

முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்காமலும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதன் விளைவே விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற பெருங்கனவோடு இருந்த இளம் பிள்ளையின் கனவுகள் சிதையக் காரணமாகியுள்ளது. எனவே, தம்பி விக்னேசுவரனுக்கு நேர்ந்த கொடுமைக்கு மின்வாரியமும். தமிழ்நாடு அரசுமே பொறுப்பேற்று. அவருக்கு அரசு வேலையும். துயர் துடைப்பு நிதியாக 50 லட்ச ரூபாயும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அன்புத்தம்பி விக்னேசுவரன் எதன் பொருட்டும் மனம் கலங்காமல், உள்ள உறுதியுடனும், துணிவுடனும் வாழ்வினை எதிர்கொள்ள வேண்டுமென்றும், நம்பிக்கையுடன், விடாமுயற்சி செய்தால் தங்களுக்கு விருப்பமான வேறு துறையில் உறுதியாகச் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். தம்பி விக்னேசுவரன் விபத்தின் பாதிப்புகளிலிருந்து விரைந்து மீண்டிட விழைகிறேன்! என சீமான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சென்னை கொருக்குப்பேட்டை.. விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்யப்பட்ட பல உதவிகள் - புஸ்ஸி ஆனந்த் ட்வீட்!
 

Follow Us:
Download App:
  • android
  • ios