Asianet News TamilAsianet News Tamil

நிலவுக்கு மனிதனை எப்போது அனுப்புவோம்.? சந்திரயான் 3 லேண்டர் ஆயுட்காலம் முடிந்து விட்டதா.? வீர முத்துவேல் தகவல்

அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவிற்கு மனிதனை அனுப்பிய நிலையில் 2040ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும் என சந்திராயன் மூன்று திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். 
 

Scientist Veera Muthuvel has said that man will be sent to the moon by 2040 KAK
Author
First Published Feb 11, 2024, 10:14 AM IST

விண்வெளியில் ஆராய்சி மையம்

சந்திரயான், மங்கல்யான், ஆதித்யா என விண்வெளி துறையில் இந்தியா அடுத்தடுத்து சாதித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதனையடுத்து நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி தொடர்பாக சந்திராயன் மூன்று திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தகவல் தெரிவித்துள்ளார்.  

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்க நடைபெற்றது. இதில் சந்திராயன் மூன்று திட்ட இயக்குனர் வீர முத்துவேல் கலந்து கொண்னார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்று ஊரக பள்ளி மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் விண்வெளி மற்றும் சந்திராயன் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  கருத்தரங்கம் நடைபெற்றதாக கூறினார்.  

Scientist Veera Muthuvel has said that man will be sent to the moon by 2040 KAK

2040க்குள் நிலவுக்கு மனிதன்

மேலும் இஸ்ரோ சார்பில் ரிமோட் சென்சிங், தகவல் தொடர்பு, வானிலை மற்றும் ஜிபிஆர்எஸ், செவ்வாய் கிரகம், சூரியன் ஆகியவற்றை ஆய்வு செய்ய கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றார். மேலும் அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்தது வருகிறது என கூறினார்.  இந்தியா சார்பில் விண்வெளியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தவர், 2040ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும் என்று கூறினார். 

சந்திராயன் மூன்று செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர் அடங்கியது. இதன் ஆயுட்காலம் ஒரு லூனார் நாளாகும். தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. அந்த செயற்கைக்கோள் எந்த நோக்கத்திற்காக விண்ணிற்கு செலுத்தப்பட்டதோ அந்த நோக்கம் வெற்றி அடைந்ததாக வீர முத்துவேல் கூறினார்.

இதையும் படியுங்கள்

சென்னையில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் பக்கம் போறீங்களா.? ரூட்டை மாற்றி போக்குவரத்து போலீஸ்- காரணம் என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios