கனமழை எச்சரிக்கை - நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !!
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, பல இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழையும், துாத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் வேலுார் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மிக கனமழையும் பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை கன மழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு