தவறு செய்யும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுங்கள்.. பள்ளிக்கல்வித்துறை போட்டு அதிரடி உத்தரவு..

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
 

School Education Department New Order

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:கார் விபத்தில் சிக்கிய திமுக MLA..! கையில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமெனவும் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்றவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 24 ஆம் தேதி கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவத்தையடுத்து பள்ளியின் தலைமையாசிரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை 77 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க:செஸ் திருவிழாவில் வித,விதமான 3500க்கும் மேற்பட்ட உணவுகள்.! வீரர்களை அசரவைக்கும் தமிழக அரசு...உணவு பட்டியல் இதோ

பள்ளியில்‌ மாணவர்கள்‌ சண்டையிட்டுக்‌ கொள்ளுதல்‌, சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம்‌ எதுவென்றாலும்‌ உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்‌. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின்‌ அனுமதியின்‌ பேரில் தான்‌ ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்‌. பேருந்தில்‌ வரும்‌ மாணவர்கள்‌ பேருந்தின்‌ மேற்கூரையில்‌ அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில்‌ தக்க அறிவுரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் சொல்லப்பட்டிருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios