செஸ் திருவிழாவில் வித,விதமான 3500க்கும் மேற்பட்ட உணவுகள்.! வீரர்களை அசரவைக்கும் தமிழக அரசு...உணவு பட்டியல் இதோ

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வீர்களுக்கு வேளா வேளைக்கும் வித, விதமான உணவுகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறப்பு உணவு தயாரிப்பாளரை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
 

More than 3500 meals are served daily to Olympiad chess players

 சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் நடைபெற உள்ளது.  இந்த  ஒலிம்பியாட் செஸ் போட்டியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு கடந்த சில மாதங்களாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கடந்த ஒரு வாரமாக சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களை தமிழக அரசு சார்பாக வரவேற்க்கப்பட்டு, அவர்களுக்கு சென்னை மகாபலிபுரத்தை சுற்றியுள்ள இடங்களில் தங்குதற்கு நட்சத்திர விடுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் வீரர்களுக்கு புதுவகையான உணவு வழங்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

செஸ்ஸூடன் பெருமை மிகு தொடர்புடைய தமிழகம்.! ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்- மோடி

More than 3500 meals are served daily to Olympiad chess players
குறிப்பாக, வெளிநாட்டு வீரர்களுக்கு அந்த நாட்டு உணவுகளையே வழங்குவதற்காக அனைத்து வகையான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்,  சிற்றுண்டிகள் மற்றும் சாஸ்கள் உள்பட 3500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றுவுள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதுதவிர பிரதான உணவு வகைகளாக 700 வகைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீரர்களுக்கு 3 வேளையும் தேவையான உணவுகள் மற்றும் டி,காபி போன்றவை வழங்கவும், வீரர்களுக்கு கொடுக்கவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  இந்த உணவு ஏற்பாடுகளை இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ். தல்வார் ஏற்பாடு செய்துள்ளார். 

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் செஸ் ஒலிம்பியாட் புறக்கனிப்பு.. தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிரடி முடிவு.!

More than 3500 meals are served daily to Olympiad chess players

வீரர்களுக்கு ஒரு நாள் கொடுக்கப்படும் உணவு வகைகள் மீண்டும் மாறு நாள் திரும்ப வராமல் புதிய வகை மெனுக்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.  செஸ் போட்டி இன்று தொடங்கியதில் இருந்து போட்டி முடிவடையவுள்ள தினம் வரை  செஸ் போட்டி திருவிழா மட்டுமில்லாமல் உணவு திருவிழாவாகும் நடைபெற இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு... செஸ் விளையாடி மகிந்த மு.க.ஸ்டாலின்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios